இந்த நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழி 64-02-06E 1. நம்முடைய தலைகளை அப்படியே ஒரு நிமிடம்... வணங்கியிருக்கையில், அப்படியே ஒரு நிமிடம்... எங்கள் பரலோகப் பிதாவே, இயேசு கிறிஸ்துவுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், அவருடைய மகத்தான வாக்குத்தத்தங்களை அவர் எங்களுக்கு அளித்துள்ளார். இந்த எல்லாக் காரியங்களுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் இங்கே இந்த நகரத்தில் இந்த அருமையான கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளின் கீழ் இருக்கிறோம். அவர் எங்கள் மத்தியில் அசைவாடி, தம்முடைய பிரசன்னத்தை காண்பித்து, ஜனங்களுக்கு விசுவாசத்தை அளித்து, அவர்கள் விசுவாசிக்கும்படி ஏவப்படுதலைக் காண நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிதாவே, அதுவே இங்கு இருப்பதற்கான எங்களுடைய நோக்கமாக இருக்கிறது. நாங்கள் உம்மை நம்ப முடியும் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் ஏமாற்றமடையமாட்டோம். நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். இக்காலை இங்கே இந்த நகரத்தில் உள்ள இந்த அருமையான ஊழியக்காரர் குழுவுடன் இந்த காலை சிற்றுண்டியை அருந்துவதற்கு மிகவும் மகிழ்ச்சியாயிருந்தேன். எனவே நாங்கள்...யாரேனும் அதை விரும்பினால், சகோதரர்கள் அதை ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாம் அப்படிப்பட்ட ஒரு ஐக்கியத்தின் நேரத்தை உடையவர் களாயிருந்தோம். இப்பொழுது, இன்றிரவு நம்முடைய இரண்டாவது இரவு, சரியான வழியில் செல்கிறோம். எனவே ப்பொழுது, கர்த்தர் உங்கள் எல்லோரையும் மிகவும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். நான் இங்கே அமர்ந்துள்ள என்னுடைய ஒரு நல்ல நண்பர் திருமதி உப்ஷாவை, சகோதரி உப்ஷாவை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. எனக்கு சகோதரன் வில்லி உப்ஷா ஞாபகம் வருகிறது. அன்றொரு நாள் காங்கிரஸ்காரர், சகோதரன் வில்லியினுடைய புகைப்படத்துடன் அவரிடத்திலிருந்து வந்திருந்த ஒரு கடிதம் என்னிடம் இருந்தது. எனவே, அவர்-அவர் ஏறக்குறைய அறுபத்தாறு வருடங்களாக முடமாயிருந்தார். ஒரு இரவு ஒரு கூட்டத்தில் இருந்தபோது, அவர் உட்கார்ந்திருந்ததையும், தன்னுடைய சூட் துணியுடன் கூட்டத்தினூடாக சென்று, தலை வணங்குவதையும் ஒரு தரிசனத்தில் கண்டேன். அவர் ஒரு சக்கர நாற்காலியிலும், ஊன்றுகோலிலும் இருந்தவர், நீங்கள் யாவரும் அவரை அறிவீர்கள், கர்த்தராகிய இயேசு அன்றிரவே அவரை முழுமையாக சுகமாக்கினார். அவர் மரிக்குமளவும் விசுவாசத்தை உடையவனாயிருந்தார். இன்றிரவு, அவருடைய விதவை இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதற்காக, நாங்கள் கனப்படுத்தப்படுவதை உணருகிறோம். அவர் கர்த்தரைக் காணச் சென்றபோது அவருக்கு எத்தனை வயது? அவருக்கு எவ்வளவு வயது? [சகோதரி உப்ஷா பதிலளிக்கிறார்-ஆசி.) எண்பத்தாறு வயது வரை உயிர் வாழ்ந்தார். (சகோதரி உப்ஷா அவருடைய மரணத்தைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்).....இருக்க பரலோகம் சென்றார். மகத்தான மனிதர்களுக்காகவும், விசுவாசத்தின் மகத்தான போர்வீரர் களுக்காகவும் நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, இன்றிரவு, நாங்கள் உங்களை நீண்ட நேரம் வைத்திருக்க விரும்பவில்லை. நாங்கள் நேற்று மாலை பத்து மணிக்கு இருபது நிமிடங்களாகும் வரை பத்து நிமிடங்களுக்கு மேலாக உங்களைப் பிடித்து வைத்திருந்தோம். நாம் வழக்கமாக ஒன்பது முப்பது மணிக்கு வெளியே செல்வோம். நான் இன்றிரவு அதற்கு ஈடுகொடுக்க முயற்சிப்பேன். நான்...நாட்டின் பல்வேறு பாகங்களைச் சுற்றிலும் நான் பிரசங்கித்து வந்த என்னுடைய தீர்க்கதரிசன செய்திகளிலிருந்து, மீண்டும் சுவிசேஷக ஆராதனைகளை நடத்த நான் மாறியுள்ளேன். அந்த தீர்க்கதரிசன செய்திகளின் பேரில், நாம் அதை தொடர்ந்து கூறிக்கொண்டே இருப்போம். இப்பொழுது அதைக் குறைப்பது, ஒருவிதமான கடினமாயுள்ளது, அது ஊழியத்தை முழுவதுமாக மாற்றுகிறது. நான் இதைச் செய்யக் காரணம் என்னவெனில்: ஒரு நாள் கனடாவிலிருந்து வந்தபோது, இங்கே மேலே உள்ள மொன்டானாவில், ஒருநாள் அதிகாலையில் கர்த்தராகிய இயேசு... அது வினோதமாக தொனிக்கிறது என்பதை நான் அறிவேன், ஆனால் நான் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஏதோ ஒன்று என்னுடைய கவனத்தை ஈர்த்தது. "உம்முடைய பெயர் அந்த மலையின் மேல் எழுதப்பட்டிருக்கிறது" என்று கூறுகிற ஒரு சத்தத்தை, என்னுடைய சத்தத்தை நீங்கள் கேட்பது போலவே, நான் கேட்டேன். நான் பார்த்தபோது, நாங்கள் நின்றபோது, பில்லியும் நானும், கர்த்தராகிய இயேசு, "நீங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தது போலவே இப்பொழுது திரும்பி வந்து சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபடத் துவங்கு" என்றார். அதனால்தான் நான் இன்றிரவு இங்கே இருக்கிறேன், ஏனென்றால் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க மீண்டும் திரும்பிச் செல்கிறேன். அதற்கு ஒரு பெரிய கதை உண்டு, இங்குள்ள ஜனங்கள், நம்முடைய ஒலிநாடாக்களைக் கேட்கிறவர்கள், அந்தக் கதையைக் குறித்து அறிந்திருப்பீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். நான் மறுபடியும் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க இங்கிருக்கிறேன். தேவனில் அநேக மகத்தான வரங்கள் உள்ளன. நாம் அவரை அவ்வாறு செய்ய அனுமதித்தால், தேவன் விரும்புகிற எந்தக் காரியத்தையும் அவர் உபயோகிக்க முடியும். அவர் தேவனாகிய கர்த்தர். இப்பொழுது, நான் முயற்சிக்கிறேன்...ஜனங்கள் மீது கரங்களை வைப்பதை நான் தவிர்க்க முடிந்தால், ஏனென்றால், அங்கே, அது போன்று காணப்படுகிறது (அது சரிதான்), ஆனால் அது யாரோ ஒருவர், சுகமாக்கப்பட்டு, அவர்கள், "சரி, இன்னார்-மற்றும்-இன்னார் கைகளை என் மேல் வைத்தனர்" என்கின்றனர். பார்த்தீர்களா? நீங்கள் அவர் மீது, கிறிஸ்து மீது கரங்களை வைப்பதை நான்-நான் காண விரும்புகிறேன். என்னுடைய நோக்கம் என்னவென்றால், ஒவ்வொரு விசுவாசிக்கும் தெய்வீக சுகமளித்தல் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதை வேத வாக்கியங்களின் மூலம் நாம் யாவரும் அறிவோம். அது இயேசுவினுடைய வேதனையின் ஒரு பாகமாயுள்ளது-ஒரு பாகமாயுள்ளது: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். மோசே வனாந்திரத்தில் வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினதுபோல, மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்." அதே காரணம். அது அந்த மாதிரியாயிருந்தது, கிறிஸ்து அந்த முன் மாதிரியாயிருக்கிறார். ஆகையால் பழைய பாவநிவிர்த்தியானது சுகத்தை பிறப்பிக்கக் கூடுமானால், புதியது எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும், அது மேலான காரியங்களைப் பெற்றுள்ளது, அது தெய்வீக சுகமளித்தலை பிறப்பிக்கிறது. இப்பொழுது, வெண்கல சர்ப்பத்தின் நிமித்தமாக இயேசுவும் உயர்த்தப்பட்டார் (அவர் பாவமாக்கப்பட்டார்): ஏனென்றால், சர்ப்பமானது வெண்கலத்தினால் உண்டாக்கப்பட்டது வெண்கலம் "தெய்வீக நியாயத்தீர்ப்பின் அடையாளம்"; சர்ப்பமானது, பாவமும் சுகவீனமும் பிரவேசித்த ஏதேன் தோட்டத்திலிருந்து, "சர்ப்பத்தின் சாபத்தை" காண்பித்துள்ளது. இயேசுவும்... தெய்வீக சுகமளித்தலை பிரசங்கிக்காமல் பாவநிவிர்த்தியாக இயேசு கிறிஸ்துவை எவருமே பிரசங்கிக்க முடியாது. தெய்வீக சுகமளித்தலைப் பிரசங்கிக்காமல் எவருமே சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடியாது. காரணம், பாருங்கள், நீங்கள்...அவர்...சில காரியங்களை உடையவர்களாயிருக்க வேண்டியதில்லை. ஒரு மிருகம் உங்களைப் பற்றிப் பிடித்திருந்தால், நீங்கள் அதனுடைய பாதத்தை துண்டிக்க வேண்டியதில்லை, அல்லது அதனுடைய-அதனுடைய கரத்தை துண்டிக்க வேண்டாம் அல்லது எது உங்களை சூழ்ந்து கொண்டிருந்தாலும் சரி. அதனை தலையிலிருந்து கொன்றுவிட்டு நீங்கள் அதை வென்றுவிடலாம். இயேசு பாவத்திற்காக மரித்தபோது, அவர்-அவர் அந்தவிதமாகவே செய்தார். பாவம் செய்த எல்லாவற்றையும் அவர் கொன்று போட்டார், அவர் நம்மை முற்றிலுமாக மீட்டார். நாம் இப்பொழுது நம்முடைய மகத்தான...அவருடைய மறு வருகையின்போது நம்முடைய பரிபூரண விடுதலையின் உறுதிப்பணத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். எனவே, நீங்கள் பாருங்கள், சுகவீனம் நேரடியாக பாவத்தினால் உண்டாகிறது. யாரோ ஒருவர் பாவம் செய்தார். பாவம் இல்லாதிருக்கும் வரைக்கும் சுகவீனம் இல்லாதிருந்தது. அதன்பின்னர் பாவம் உள்ளே பிரவேசித்தபோது, சுகவீனம் அதைத் தொடர்ந்தது. சுகவீனம் பாவத்தின் ஒரு தன்மையாயுள்ளது. அதன்பின்னர், அவர் பாவத்தை கொன்றபோது, அது அதனோடு எல்லா தன்மைகளையும் எடுத்துக் கொண்டது. பாருங்கள், அது அவ்வாறு இருக்க வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, நாம் இன்றிரவு வேதவாக்கியத்தின் ஒரு பகுதியை வாசிக்கப் போகிறோம். இன்றிரவு இங்கே திரும்பி வந்ததில், நான் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன், இன்று காலை அந்தக் கூட்டத்தில் இருந்த என்னுடைய அருமையான சில சகோதரர்கள், அங்கே பின்னால் உள்ள சகோதரன் ஷகாரியனையும் கூட, பாருங்கள், என்னுடைய நண்பர்கள் அநேகர், இன்னும் அதிகமானவர்கள். சகோதரர்களாகிய நீங்கள் இன்றிரவு இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் விரும்பினால், எனக்காக இப்பொழுது ஜெபியுங்கள். இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால், நாம் வேதவாக்கியத்திற்கு, ஒரு சிறு பாடப் பொருளுக்காக திருப்புவோமாக. 2. நாளை இரவு, வியாதியஸ்தருக்காக மீண்டும் ஜெபிப்பேன் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது நான் பேசிக்கொண்டிருக்கும் போது...கவனியுங்கள், ஒவ்வொருவரும் இதைச் செய்ய முயற்சி செய்யுங்கள், எந்த குறிப்பிட்ட காரியமும் சம்பவிக்கும் வரை காத்திருக்க வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டிய காரியம், இப்பொழுதே தேவனை விசுவாசிப்பதேயாகும். அவரை இப்பொழுதே விசுவாசியுங்கள்! பார்த்தீர்களா? 3. இப்பொழுது எல்லாவிதமான ஊழியங்களும் இருந்திருக்கின்றன. தேவன், இந்தக் கடைசி நாட்களில், அவருடைய புத்தகத்தில் அவர் பெற்றுள்ள எல்லாவற்றையும் நமக்கு அளித்திருக்கிறார் என்று, நான் நினைக்கிறேன். அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிற ஒவ்வொரு காரியத்தையும், நாம் கண்டிருக்கிறோம், ஆனால் இன்னமும் ஜனங்களால் அதை கிரகித்துக் கொள்ள முடியவில்லை என்பது போன்று காணப்படுகிறது. அதை கிரகித்துக்கொள்ள நியமிக்கப்பட்டவர்கள், அதை கிரகித்துக்கொள்வார்கள்; அவர்கள் மாத்திரமே. அது ஒருவனை குருடாக்குகிறது; மற்றொருவருடைய கண்களைத் திறக்கிறது. 4. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்கிறோம் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அவர் மரிக்கவில்லை, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார். அவர் இன்றிரவு இங்கிருக்கிறார். இன்றிரவு, நாம் அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறோம், இந்த நாளுக்காக அவர் அளித்துள்ள எந்த வாக்குத்தத்தத்தையும் உறுதிப்படுத்தவும் நன்றாய் அளிக்கவும் அவர் இங்கே இருக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். ஆகையால், அவர் இருந்த எந்தக் காரியத்திலும், அவர் இன்றிரவு இருக்கிறார். ஆகையால் நாம் அவருடைய வார்த்தையை இப்பொழுது வாசித்து, அடுத்த பதினைந்து, இருபது நிமிடங்களுக்கு அவரைக் குறித்து பேசும்போது, அவரை விசுவாசிப்போம். 5. ஆதியாகமம், 22-ம் அதிகாரம் 7-ம் மற்றும் 8-ம் வசனங்கள், ஒரு பாடப்பொருளைப் பெற்றுக்கொள்ளும் விதத்தைக் குறித்துக் கூறுகின்றன. அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய், 6. கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய வார்த்தையை ஆசீர்வதியும், அது வெறுமையாய் திரும்பாதிருப்பதாக, தேவையுள்ளவர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வரும் விதைகள் நிலத்தில், சரீரப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் விழுவதாக. நாங்கள் எங்களை உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறோம்; சபையோர், கூட்டத்தார், வார்த்தை, உரை, சூழல். நாங்கள் இயேசு கிறிஸ்துவைக் காணும்படியாக பரிசுத்த ஆவியானவர் எங்களுடைய ஜீவியங்களை ஆட்கொள்வாராக. ஆமென். 7. இப்பொழுது அடுத்த சில நிமிடங்களுக்கு நான் பேச விரும்புகிறேன்: இந்த நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழி. 8. தேவன் எப்பொழுதுமே ஒரு வழியை உடையவராயிருந்து வருகிறார். இரண்டு வழிகள் உள்ளன, அது, நம்முடைய வழிகள் அல்லது அவருடைய வழிகள். தேவன் இன்றைக்கு ஒரு வழியை வைத்திருக்கிறார், ஏனென்றால் அவர் எப்பொழுதுமே எல்லாவற்றிற்கும் ஒரு வழியை உண்டுபண்ணியிருக்கிறார். தேவன் துவக்கத்திலேயே, முடிவை அறிந்திருந்தார், எனவே அவர் ஒவ்வொரு காலத்திற்கும் தம்முடைய வேதவாக்கியங்களை வகுத்துள்ளார். அந்தக் காலத்தில், அது வரும்போது...இப்பொழுது இதைக் காணத் தவறாதீர்கள். அந்த காலத்தில், அது வரும்போது, வழக்கமாக ஊழியமானது கொள்கைகளில் மிகவும் கலந்துள்ளது, அது வார்த்தையிலிருந்து பத்து இலட்சம் மைல்கள் தூரமளவிற்கு, பாரம்பரியங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றன. 9. அதன்பின்னர் தேவன் எப்பொழுதுமே யாரோ ஒருவரை, ஒரு தீர்க்கதரிசியை காட்சியில் அனுப்புகிறார். இந்த தீர்க்கதரிசி... தேவன் தம்முடைய முறைமையை ஒருபோதும் மாற்றுகிறதில்லை. அவர் தம்முடைய வழிகளை ஒருபோதும் மாற்றுவதில்லை. அவர் அதை எப்பொழுதும் அதேவிதமாகவே செய்கிறார். அவர் எப்பொழுதுமே அதை உடையவராயிருக்கிறார்; அவர் அதை இந்த முறை செய்ய வேண்டும். மேலும், இதன் மூலம், தேவன் அந்த வார்த்தையை கிரியை செய்து ரூபகாரப்படுத்துகிறார். நான் நேற்றிரவு உங்களிடத்தில் பேசினதுபோல, தேவன் தம்முடைய சொந்த வியாக்கியானத்தை அளித்துக்கொண்டிருக்கிறார். தேவனுடைய வார்த்தையை வியாக்கியானிக்க யாருமே தேவையில்லை. அவர் தாமே அதை ரூபகாரப்படுத்தி, அதை உண்மையாக்குவதன் மூலம் வியாக்கியானிக்கிறார். தேவன் ஒரு குறிப்பிட்டக் காரியத்தைச் செய்வேன் என்று கூறும்போது, அப்பொழுது அவர் அதைச் செய்கிறார், அதற்கு மேல் கேள்வியே இல்லை. அந்தவிதமாகவே அவர் அதைச் செய்கிறார். 10. எனவே தேவன் நமக்காக ஒரு வழியை உண்டு பண்ணியிருக்கிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளை நேசிக்கிறார். அவர் தம்முடைய ஜனங்களை நேசிக்கிறார். அவர் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார். நீங்கள் உதவி செய்ய விரும்புவதைக் காட்டிலும் அவர் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார். உங்களால் அதை உங்களுடைய இருதயத்தில் புரிந்து கொள்ள முடிந்தால், நீங்கள் உங்களுக்கு உதவி செய்துகொள்ள விரும்புவதைக் காட்டிலும் தேவன் உங்களுக்கு உதவி செய்ய விருப்பமுள்ளவராயிருக்கிறார். ஆனால் அவர் ஒரு வழியை உடையவராயிருக்கிறார், அவருடைய வழியினூடாக அவர் கிரியை செய்வார் என்பதே அந்த ஒரே வழியாயயுள்ளது. நீங்கள் அவருடைய நிபந்தனைகளுக்கு வர வேண்டும், உங்களுடைய நிபந்தனைகளுக்கு அல்ல. அவருடைய நிபந்தனைகள்! நீங்கள் அதை ஒரு குறிப்பிட்ட வழியில் விரும்புகிறீர்கள், ஆனால் அவர்- அவர் அவருடைய வழியில் அதை உங்களுக்கு அளிக்கிறார். 11. நாகமான் யோர்தானின் தண்ணீரில் மூழ்குவது போல. ஏன், அவன் தன்னுடைய தேசத்தில் தண்ணீர் மிகவும் சுத்தமாகவும், மேம்பட்டதாகவும் இருக்கிறது என்று கூறினான், ஆனால் தீர்க்கதரிசி கூறியது அதுவல்ல. "இங்கே மூழ்கு." அவன் ஒருமுறை முழுகினபோது, குஷ்டரோகம் இன்னும் அங்கே இருந்தது; ஆறு முறை, அது இன்னமும் அங்கிருந்தது. அவன் கீழ்ப்படிந்து தேவனுடைய வழிக்கு வர வேண்டியதாயிருந்தது. அவன் தேவனுடைய வழிக்கு முழுவதுமாக கீழ்ப்படிந்தபோது, குஷ்டரோகம் நீங்கிற்று. 12 இன்றிரவு, நான் கூறுகிறேன், அதாவது நாம் தேவன் அருளியிருக்கிற வழிக்குக் கீழ்ப்படிவோமானால், குஷ்டரோகம் நீங்கி, சுகவீனம் போய்விடும், எல்லாமே போய்விடும், ஆனால் இந்த நாளுக்கான அவருடைய வழியில் நாம் வர வேண்டும். இப்பொழுது, யோர்தானில் மூழ்குவது இப்பொழுது எந்த நன்மையையும் செய்யாது; அது நாகமானுக்கானதாயிருந்தது. நியாயப்பிரமாணம் யூதர்களுக்கான தாயிருந்தது. கிருபை கிறிஸ்துவினால் உண்டானது. 13. ஆனால் ஒவ்வொரு ஏற்கனவே காலமும் முன்னறிவிக்கப் பட்டுள்ள அதனுடைய சுவிசேஷத்தின் பாகத்தை உடையதா யிருக்கிறது. இந்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய முழுமையான வெளிப்பாடாய் உள்ளது. இனி அதனோடு ஒன்றும் கூட்டப்படவோ அல்லது அதிலிருந்து ஒன்றும் எடுக்கப்படவோ முடியாது. அதைச் செய்கிற நபர் சபிக்கப்பட்டவனாயிருக்கிறான். நாம் அதனோடு ஒன்றையுமே கூட்ட முடியாது, அதிலிருந்து எதையும் எடுக்க முடியாது. நாம் இங்கே நோக்கிப் பார்த்து, இந்த காலத்திற்கான வாக்குத்தத்தம் என்ன என்பதை காண வேண்டும், அதன்பின்னர் அது சம்பவிப்பதைக் காண வேண்டும். அது தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானப்படுத்துவதாகும். ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்" என்று அது கூறியபோது, அவள் கர்ப்பவதியானாள். அதுவே அதைக் குறித்த தேவனுடைய வியாக்கியானமாயுள்ளது. அவர் என்ன வாக்குத்தத்தம் செய்கிறாரோ, அதை அவர் செய்கிறார். 14. இப்பொழுது தேவன் தம்முடைய செய்கை முறைகளை மாற்றுகிறதில்லை என்பதை நாம் காண்கிறோம். அவர் எப்பொழுதுமே அதையே செய்கிறார். நாம் வரையறைக் குட்பட்டவர்களானபடியால் நாம் தொடர்ந்து மாறிக்கொண்டி ருக்கிறோம். நாம் எல்லாவிதமான தவறுகளையும் செய்கிறோம், நாம் முன்னேறி, மேம்பட்டு வர முடியும். ஆனால் தேவன் எல்லையற்றவர். அவனுடைய முதல் தீர்மானம் எல்லா நேரத்திலும் பரிபூரணமாயிருக்கிறது. அவரால் புத்திசாலியாகிவிட முடியாது. அவர்...அவரே எல்லா ஞானத்திற்கும் மூல ஆதாரமாக இருக்கிறார். அவரே எல்லா ஞானமுமாயிருக்கிறார். அவர் சகல வல்லமையுள்ளவராயும், சர்வ வல்லமையுள்ளவராயும், சர்வ வியாபியாயும், சகலத்தையும் அறிந்தவராயும், முடிவற்றவராயும் இருக்கிறார். ஆகையால் அவர் எந்தக் காரியத்தையாவது கூறும்போது, உங்களுடைய ஆத்துமாவை அதின் பேரில் சார்ந்திருக்கச் செய்யுங்கள், ஏனென்றால் அது உண்மை. 15. இப்பொழுது சில சபைகள், "நாங்கள் இதை விசுவாசிப்பதில்லை, நாங்கள் அதை விசுவாசிக்கிறோம்" என்று கூறுகின்றன. தேவன் உலகத்தை ஒரு சபையைக் கொண்டு ஒருபோதும் நியாயந்தீர்க்கமாட்டார். அவர் அதை இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நியாயந்தீர்க்கிறார், இயேசுவே வார்த்தையாயிருக்கிறார். அவர் வார்த்தையைக் கொண்டு சபையை நியாயந்தீர்ப்பார். 16. இது எல்லா காலங்களுக்கும், இந்த காலத்திற்குமான இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாயிருந்தால், அவர் இந்த காலத்தில் என்ன செய்வார் என்று இந்த வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்; அது அதைச் செய்வதை நாம் காணும்போது, அவர் செய்வதாக வாக்குத்தத்தம் செய்ததை நாம் காணும்போது. ஒரு கன்னிப் பிறப்பல்ல; அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. ஆனால் இன்றைக்கு அவர் என்ன செய்வதாக வாக்குத்தத்தம் செய்தாரோ, இன்றைக்கு அவர் என்ன செய்வதாகக் கூறினாரோ, அந்தவிதமாகத்தான் அவர் இன்றைக்கும் இருக்கிறார். 17. அநேக சமயங்களில், ஜனங்கள், "பாருங்கள், நான் அதை விசுவாசிப்பதில்லை" என்று கூறுகின்றனர். பாருங்கள், நீங்கள் மறுபடியும் ஏவாளின் வியாக்கியானியை பெற்றுக் கொண்டீர்கள்; அதன் ஒரு பாகத்தை மாத்திரமே எடுத்துக்கொள்கிறீர்கள், ஆனால் முழுவதுமாக அல்ல. 18. எனவே தேவன் எப்பொழுதும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவருடைய வார்த்தை, அவர் என்ன கூறுகிறாரோ, அவர் அதைச் செய்வார். 19. அவர் மாறுகிறதில்லை என்பதைக் காண்பியுங்கள். ஆதியாகமம் 1-ல் அவர், "ஒவ்வொரு வித்தும் அந்தந்த விதமானவைகளைப் பிறப்பிக்கக்கடவது. ஒவ்வொரு வித்தும் அந்தந்த விதமான வித்தை பிறப்பிக்கக்கடவது" என்றார். எல்லா பரிணாம வாதிகளையும் வீழ்த்திவிடுகிற ஒரு காரியத்தை நாம் அங்கே காண்கிறோம். நீங்கள் பொருட்களை மீண்டும் உருவாக்க முடியாது. நீங்கள் குதிரையையும் மற்றும் மற்றும்-மற்றும் கழுதையையும் இந்த விதமாக ஒன்று சேர்த்து இனவிருத்தி செய்தால், நீங்கள் ஒரு கோவேறு கழுதையைப் பெற்றுக் கொள்வீர்கள், ஆனால் ஒரு கோவேறு கழுதை மீண்டும் இனப்பெருக்கம் செய்து மற்றொரு கோவேறு கழுதையைப் பெற்றுக்கொள்ள முடியாது. அது அங்கேயே நின்றுவிடுகிறது. "ஒவ்வொரு விதமான விதையும்." அவைகள் இனப் பெருக்கத்தை உண்டாக்கக் கூடும், ஆனால் அது மீண்டும் தன்னை மாற்றிக் கொள்கிறது, அது அந்தவிதமாக பரிணாம வளர்ச்சியடைவதில்லை என்பதைக் காண்பிக்கிறது. இல்லை ஐயா. அது அங்கேயே நின்றுவிடுகிறது. நீங்கள் கீரையையும் மற்ற ஏதோ ஒன்றையும் ஒன்று சேர்த்து இனப்பெருக்கம் செய்து, ஒரு முட்டைக்கோஸை கொண்டு வரலாம், ஆனால் உங்களால் அதை மறுபடியும் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இல்லை ஐயா. நீங்கள் கலப்பின சோளத்தை இனப்பெருக்கம் செய்யலாம்; ஆனால் நீங்கள் அந்த கலப்பின சோளத்தை மீண்டும் பயிரிட்டால், உங்களுக்கு ஒன்றுமே கிடைக்காது. ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை மீண்டும் உருவாக்க வேண்டும். காரணம், தேவன், "ஒவ்வொரு வித்தும் அந்தந்த விதமான விதைகளைப் பிறப்பிக்கக்கடவது" என்றார். 20. இப்பொழுது, காரியங்களை கலப்படமாக்குவதன் மூலம், இன்றைக்கு உலகம் என்ன அடைந்துள்ளது என்பதைப் பாருங்கள். நான் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையை இங்கே படித்துக் கொண்டிருந்தேன். அங்கே, "இப்பொழுதிலிருந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அது தொடர்ந்து நீடித்தால், பெண்களுக்கு குழந்தை பிறக்காது. அவர்கள் கலப்பின உணவுகளை உண்கின்றனர்" என்றிருந்தது. அதைக் குறித்த காரியம் என்னவெனில், அவர்கள் அதை கலப்பினமாக்கியிருக்கிறார்கள், அந்த விதமான உணவை உண்ணும்படியாக, மானிடவர்க்கத்துக்காக உண்டாக்கப் பட்ட ஒரு வழி அல்ல. அது தேவைக்கு உண்டாக்கப்பட்டது...அது சிருஷ்டிக்கப்பட்ட விதத்தில் அதைப் புசிக்கும்படிக்கே. அந்தக் காரணத்தினால்தான், இன்றைக்கு, அவர்களால் இறைச்சி வகைகளை வைத்துக்கொள்ள முடியவில்லை, ஏனென்றால் எல்லாமே அந்தவிதமாகவே கலப்படமாய் உள்ளது, விரைவாக நடப்பட்டு, மற்றும், ஓ, ஒவ்வொரு விதமான ஒரு வழியிலுமே. அது முற்றிலும் குழப்பமடைந்துள்ளது. தேவன் நன்மையாக உண்டாக்கின ஏதோ ஒரு காரியத்தை எடுத்து, அதைத் திருப்பி வேறு வழியில், தங்கள் சொந்த வழியில் செய்ய முயற்சிப்பதன் மூலம், முழு மானிட வர்க்கமும் தங்களுடைய சொந்த சாதனைகளால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலைக்கு அது வந்துள்ளது. தேவன் அதை உண்டாக்கின விதமாகவே அதை விட்டுவிடுங்கள்! 21. அவர்கள் இன்றைக்கு, சபைகளை கலப்பினமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிற ஒரு இடத்திற்கும் கூட அது வந்து விட்டது; பரிசுத்த ஆவியின் உண்மையான அபிஷேகத்திலிருந்து ஒரு கரங்குலுக்குதல்; ஒரு விதமான ஒரு தெளித்தல், ஒரு தண்ணீர் ஞானஸ்நானம். ஓ, என்னே! முழு காரியமும் கலப்பினமாகும். நாம் திரும்பி வர விரும்புகிறோம். 22. ஒரு கலப்பினத் தாவரம், நீங்கள் அதை குழந்தையைப் போல, அதற்குத் தெளித்து, அதில் பூச்சிகளும், வண்டுகளும் வராமல் காக்க வேண்டும். ஆனால் ஒரு அசலான ஆரோக்கியமான செடியல்ல; அசலானதோ உறுதியுள்ளதாய், பலமுள்ளதாய் இருக்கிறது, எந்தப் பூச்சியும் அதன்மேல் வருவதில்லை. அந்த பூச்சியை தூக்கி எறிந்துவிடும்படியான போதிய காரியத்தை அது பெற்றுள்ளது. 23. ஒரு அசலான கிறிஸ்தவனும் அவ்வாறே இருக்கிறான்! நீங்கள் அவனைக் குழந்தையைப்போல, அவனைத் தட்டிக் கொடுத்து, இதை, அதை, அல்லது மற்றதைக் கூற வேண்டியதில்லை. அவன் தனக்குள்ளாக ஏதோ ஒரு காரியத்தை உடையவனாயிருக்கிறான், அது பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அது மற்ற எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிடுகிறது. அவனிடம் கெஞ்சி மன்றாட வேண்டியதில்லை, ஏனென்றால் அவன் ஒரு அசலான தேவனுடைய செடியாயிருக்கிறான். அவனுக்குள் யுத்தங்கள் என்ற ஏதோ ஒரு காரியம் உள்ளது. ஒரு கிறிஸ்தவன் தன் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் போராடுகிறான். அவன் எப்பொழுதாவது ஜீவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், அவன் அதைச் செய்தாக வேண்டும். அதைச் செய்வதன் மூலம், அவனைக் கவனித்துக் கொள்கிற ஏதோ ஒன்று அவனுக்குள் இருக்கிறது. 24. ஆதியிலே, ஏவாள் வார்த்தையை கலப்பினமாக்க முயன்றாள். தேவன் அவளிடத்தில், "நீ அதைப் புசிக்கும் நாளிலே, நீ சாவாய்" என்றார். சாத்தான் அவளுக்கு அளித்த அறிவைக் கொண்டு அவள் அதை இனப்பெருக்கம் செய்ய முயன்றாள். அவள் அதைச் செய்தபோது, அவள் முழு மானிட வர்க்கத்தையும், அங்கேயே பிசாசிடம் இழந்தாள், அவள் தேவனுடைய கலப்படமற்ற வார்த்தையை அறிவோடு கலக்க முயன்றபோதே. 25. அது வார்த்தையைக் குறித்த அறிவிலிருந்து வருகிறதல்ல, அது பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உண்டாகிறது! "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்" என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்தவிதமாகத்தான் தேவன் அதைச் செய்கிறார். தேவனுடைய வார்த்தையே நித்திய ஜீவனின் வித்து. 26. நீங்கள் அதை கலப்பினமாக்க முயற்சித்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அதைக் கொண்டு உங்களையே கொன்றுவிடுவீர்கள். அது கிரியை செய்யாது. அது எண்ணெயும் தண்ணீரும் எப்போதும் கலக்கப்படாதது போல இதுவும் கலவாது. அது அதைச் செய்யாது. 27. அவர்கள் எல்லா வழிகளிலும், தேவனுடைய வழியைச் செய்கிறதைக் காட்டிலும் மேலான எந்தக் காரியத்தையும் ஒருபோதும் கண்டறியவேயில்லை. உங்களுக்கு தெரியும், ஒரு கோழி இந்த உலகில் பிறப்பதற்கு, அதனுடைய ஓட்டிலிருந்துத் தானே குத்தி வெளியே வருவதைக் காட்டிலும், சிறந்த, ஒரு வழியை அவர்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை. அது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஒருபோதும் ஒரு மேலான வழியைக் கண்டதில்லை. அந்த சிறு நபர் தன்னுடைய தன்னுடைய அலகின் முனையில் ஒரு சிறு துவாரத்துடன் பிறக்கின்றது. அவன் தன்னுடைய தலையில் ஆரம்பித்து, தன்னுடைய தலையை வெளியே எடுத்து, தன்னுடைய வழியை சுயாதீனமாக தேர்ந்தெடுக்கும் வரையில், அந்த சிறிய அலகினால் கீறலை உண்டாக்குவதற்கு, முன்னும் பின்னும் கீறலை உண்டாக்குவதற்கு அது அதனைப் பெற்றுள்ளது. அது தேவனால் அருளப்பட்ட வழியாய் உள்ளது. நீங்கள் அதனை ஓட்டிலிருந்து வெளியே இழுத்தால், அது அதனைக் கொன்றுவிடும். நீங்கள் அதை ஓட்டிலிருந்து வெளியே இழுத்துவிட்டால், அது ஜீவிக்காது. அவன் தேவனுடைய வழியில் வரவேண்டும். 28. இன்றைக்கு கிறிஸ்தவர்களோடுள்ள காரியமும் அதுதான். நாம் அவர்களுக்கு மிகவும் மிருதுவாக தேய்த்து, நாம் அவர்களுடைய கரங்களைக் குலுக்கி, அவர்களை இரகசியமாக உள்ளே கொண்டு வந்து, அவர்களை சபைக்குள் இணைத்தோம். அவர்களுக்குத் தேவையானது ஒரு பழங்கால ஜெப பலிபீடமாகும், அங்கு அவர்கள் தங்களைப் பயன்படுத்தும் வரை ஜெபிக்கிறார்கள், அவர்கள் உலகத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் வரையில், தேவனால் அருளப்பட்ட வழியில் வர வேண்டும். இன்றைக்கு, அதைக் குறித்த தொல்லை என்னவெனில், அவர்கள் தங்களுடைய பெயரை புத்தகத்தில் பதிவு செய்து, சபையில் சேர்ந்து கொள்கின்றனர், அவ்வளவுதான் அதற்குரியதாயுள்ளது. ஆனால் தேவனுடைய வழியோ, தேவன் உங்களுக்கு புதிய பிறப்பை அளிக்கும் வரை, அங்கேயே தரித்திருந்து, உங்களுடைய வழியில் கிரியை செய்வதே, அருளப்பட்ட வழியாய் உள்ளது. அது முற்றிலும் உண்மை. அதனை வெளியே எடுத்தால், அது அதனைக் கொன்றுவிடும். 29. இன்றைக்கு, ஜனங்களோடுள்ள, காரியமும் அதுதான். ஒரு புதிய பிறப்பை, அவர்கள் எல்லோரும் அதை தட்டிக் கழிக்கின்றனர். அவர்கள் அதை விரும்புவதில்லை. ஓ, அவர்கள் புதிய பிறப்பிற்காக ஏதோ ஒரு பதிலியை வைத்துள்ளனர், "வந்து விசுவாசியுங்கள், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான்." பிசாசு, தானே விசுவாசிக்கிறான், அவன் மறுபடியும் பிறக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு புதிய பிறப்பு உண்டு. ஏதோ ஒன்று அதனோடு செல்கிறது, அது ஒருவிதமாக பொருத்தமற்றதாயும், உலகத்திற்கு சுவையில்லாததாயும் உள்ளது. 30. எந்த பிறப்பும் ஒரு அலங்கோலமாகவே உள்ளது. அது எங்கே இருந்தாலும் எனக்கு ஒரு பொருட்டல்ல. அது பன்றி பட்டியில் அல்லது-அல்லது ஒரு மருத்துவமனையில் இருந்தாலும். ஒரு பிறப்பு ஒரு அலங்கோலம். 31. புதிய பிறப்பும் அவ்வாறு உள்ளதே! அது நீங்கள் செய்யும் என்று நீங்கள் நினைக்காத காரியங்களைச் செய்யும்படிச் செய்யும். அது உங்களை பீடத்தண்டை இறங்கி அழச் செய்யும், கூச்சலிட்டு, உங்களுடைய முகத்தின் வர்ணத்தை கழுவி, உங்களுடைய கரங்களை உயர்த்தி, தேவனைத் துதித்து, அந்நிய பாஷைகளில் பேசவும், மற்றும் எல்லாவிதமான காரியங்களையும் செய்ய வைக்கும். புதிய பிறப்பு அதைச் செய்யும், ஏனென்றால் அது மீண்டும் பிறக்க தேவனால் அருளியிருக்கிற வழியாய் உள்ளது. 32. நீங்கள் மரிக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் பிறப்பதற்கு முன்பு நீங்கள் மரிக்க வேண்டும். எந்த வித்தும் மறுபடியுமாக பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு அது மரிக்க வேண்டும். அது மரிக்காவிட்டால், அது தனித்து நிலைத்திருக்கும். ஒரு மனிதன் தன்னுடைய சொந்த சிந்தனைக்கு மரிக்க வேண்டும். அவன் தேவனுடைய வார்த்தையைத் தவிர வேறெந்த காரியத்தை குறித்த சிந்தனைக்கும் மரித்து, அவருடைய வழியில் வர வேண்டும். அது தேவனுடைய நிலம். நாம் அவரை நம்முடைய சிந்தனைகளின் பேரில் சந்திப்பதில்லை; அவர் என்ன செய்யும்படி கூறினார் என்பதன் பேரில் நாம் அவரை சந்திக்கிறோம். அதுவே அதற்காக தேவன் அருளியிருக்கிற வழியாய் உள்ளது. ஜனங்கள் அதை ஏமாற்றுகிறார்கள்; அவர்கள் அதை விரும்பவில்லை. ஆனால் அது உண்மை, அதேவிதமாகவே உள்ளது. அது, அது மரணத்தை உண்டுபண்ணும், நீங்கள் மரிக்க வேண்டும், உங்களுடைய சிந்தனைக்கு மரிக்க வேண்டும். 33. "பாருங்கள், வேதம் அதைக் கூறுகிறது என்பதை நான் அறிவேன், ஆனால் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை." அதன்பின்னர் தேவன் அதை வெளிப்படுத்தும் வரையில் அங்கேயே தரித்திருங்கள். அது உண்மை. அது...அதுதான் புதிய பிறப்பு. 34. குள்ள வாத்துக்களும் பெரிய வாத்துக்களும், தென்பகுதிக்கு செல்வதற்கு, முதலில் திரள்வதைக் காட்டிலும் ஒரு மேலான வழியை அவைகள் ஒருபோதும் கண்டறியவேயில்லை. அது உண்மை. அவைகள் யாவும் ஒன்று சேர்வதை நீங்கள் காண்பீர்கள் மற்றும் அவைகள் தாமாகவே வரும், ஏதோ ஒருவிதமான உள்ளுணர்வு அவைகளை ஒன்று சேர்த்து இழுக்கிறது, அவை ஒன்று சேர்ந்து, அவை பறக்கும் முன்பு, அவைகள் தெற்கே செல்வதற்கு முன்பு மொய்க்கின்றன. அது என்ன? அவைகள் யாவும் ஒன்று சேரும்போது, அது எழுப்புதல் நேரமாய் உள்ளது. குள்ள வாத்துக்கள், அல்லது பெரிய வாத்துக்கள் ஒன்று சேர்வதைக் கேட்பது போன்ற ஒரு சத்தத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது கேட்டதுண்டா? நான் அப்படிப்பட்டதை ஒருபோதும் கேள்விப் பட்டதேயில்லை! அவைகள்...அதைச் செய்ய அவைகளுக்கு வேறு எந்த மேலான வழியும் இல்லை. 35. அநேக சமயங்களில், வடக்கு காடுகளில், கனடாவில், குளிர்ந்த காலநிலையின் துவக்கத்தை நான் கவனத்திக்கிறேன். ஒரு கூட்ட வாத்துக்கள் அங்கே அந்த ஏரியில் பிறந்தன, அவைகள் ஒருபோதும் அந்த ஏரியிலிருந்து வந்ததேயில்லை, இந்த சிறிய வாத்து அப்படியிருக்கவில்லை. முதலாவதாக உங்களுக்குத் தெரியுமா, வடக்கிலிருந்து ஒரு குளிர்ந்த காற்று வீசுகிறது. இந்த சிறிய, சிறிய வயோதிக ஆண் வாத்து, அது ஒரு தலைவனாய் பிறந்து, அங்கே அந்த குளத்தின் நடுவில் உள்ளது, தன்னுடைய சிறிய சப்தத்தை ஆகாயத்தில் உயர்த்தி, நான்கு அல்லது ஐந்து முறைகள் சப்தமிடும்போது, குளத்தின் மேல் உள்ள ஒவ்வொரு வாத்தும் அதனருகில் வருகிறது. அது அங்கிருந்து எழும்பி, நேராக லூயிஸியானாவிலுள்ள, நெற்பயிர்களுக்குச் செல்ல முடிந்தவரை செல்கிறது. 36. ஏன்? அது அங்கு செல்வதற்கு ஒரு மேலான வழியை அவைகள் ஒருபோதும் கண்டறிந்ததில்லை. நீங்கள் அவைகளை ஒன்று சேர்த்து மந்தையாக வைக்க முடியாது. நீங்கள் அவைகளை ஒரு கூண்டில் வைத்து...சரக்கு வண்டியில், அவைகளை அங்கே ஏற்றிச் செல்லலாம். அந்த வாத்து அதைக் காட்டிலும் மேலான அறிவைப் பெற்றுள்ளது. நீங்கள் அதனை அந்த கூண்டில் வைத்து, அதனை அங்கு கொண்டு செல்ல, அது இறைச்சிக் கூடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை அது அறிந்திருக்கிறது. அது முற்றிலும் உண்மை. அது தேவன் அருளியிருக்கிற வழியில் செல்கிறது. 37. அந்தவிதமாகத்தான் மனிதன் இன்றைக்கு செய்ய வேண்டும், ஏதோ ஒரு ஸ்தாபனக் கூட்டினால் மந்தையாக அடைக்கப் படக்கூடாது. ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மற்றும் புதிய பிறப்பின் மூலம், திரளான எழுப்புதலின் மூலமாக, தேவன் உள்ளே வருவதாகக் கூறின விதத்தில் வாருங்கள். சபையில் சேர்ந்து கொள்ளுதல், வீடு வீடாக சென்று வேண்டுகோள் விடுத்தல், பத்திரிக்கைகளை வழங்குதல் அல்ல; ஆனால் ஒரு பிறப்பு, மீண்டும் பிறந்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவனுடைய வழியில், உலகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளுதல். சரியே! தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தல்! வேளையானது இங்குள்ளது. அதைத்தான் நாம் விசுவாசிக்க வேண்டும். 38. மனிதனே, உன்னால் ஒருபோதும் முடியாது...எத்தனை மனிதர்கள் அங்கே அந்த வாத்துக் குட்டைக்குச் சென்று, "இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள், சிறு வாத்துக்களே, உங்களிடத்தில் பேச ஏதோ இருக்கிறது. எங்களிடம் ஒரு படித்த வாத்து உள்ளது. அது முனைவர், மற்றும் எல்.எல்.டி. பட்டம் பெற்றுள்ளது. அதனால் உங்களை வழிநடத்த முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று கூற முயன்றாலும் எனக்கு கவலையில்லை. 39. அந்த வாத்துக்கள் அதைக் காட்டிலும் மேலான புத்தியைக் கொண்டிருந்தன. ஆம், ஐயா. அதனுடைய மேலான கல்வி என்னவாயிருந்தாலும், அதைப் பற்றி அவைகள் கவலைப் படுகிறதில்லை. அது கொடுக்கிற குறிப்பிட்ட சத்தத்தை அவைகளால் சொல்ல முடியும். அது ஒரு உள்ளுணர்வு. ஓ, என்னே! சபையானது தேவனுடைய வார்த்தையைக் குறித்து அவ்வளவாய் அறிந்திருக்க வேண்டுமே! 40. அது ஒரு குறிப்பிட்ட விளங்காத சத்தம். வேதம் கூறியுள்ளது, பவுல், "எக்காளம் விளங்காத சத்தமிட்டால், யார் யுத்தத்திற்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள முடியும்?" என்று கூறினான். அது உண்மை, சபையானது-சபையானது "இணைத்தல்" என்ற ஒரு விளங்காத சத்தத்தை கொடுக்குமானால், 41. தேவன், "பிறப்பே!" என்றார். பிறப்பு அங்கே என்ன செய்ததோ, இன்றைக்கும் பிறப்பும் அதையே செய்கிறது. ஏனென்றால் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் அப்பொழுது என்னவாயிருந்தாரோ, அவர் இன்றைக்கும் அவ்வாறே இருக்கிறார். அப்பொழுது அவர்கள் என்ன செய்தார்களோ, அதையே இன்றைக்கும் நாமும் செய்கிறோம். அவர்கள் அதை அங்கே பெற்றுள்ள விதத்தில், இன்றைக்கும் அவர்கள் அதேக் காரியத்தையே செய்கின்றனர். இன்றைக்கு அவர்கள் பெற்றுள்ள அதேக் காரியத்தைத்தான் அவர்கள் முன்பு அங்கே கொண்டிருந்தனர். அது வருகிறதென்றால், அது அந்தவிதமாகவே வருகிறது. அந்தவிதமாகவே, தேவன் வழியை அருளியிருக்கிறார். அது ஒருபோதும் மாறுகிறதில்லை. 42. வாத்துக்கள் ஒருபோதும் மாறாது. ஒவ்வொரு வருடமும், அவைகள் வடக்கிலும், தெற்கிலும், எந்த வழியில் சென்றாலும், அவை முழுவதுமாக திரள்கின்றன. அவை முதலில் திரள்கின்றன. 43. அந்தவிதமாகத்தான் தேவன் செய்கிறார். அவர் தம்முடைய வார்த்தையை காலத்தில், அந்தந்த காலத்தில் அனுப்புகிறார், அப்பொழுது அது வெளிப்படுத்தப்படுகிறது. எத்தனை மற்ற காரியங்கள் நடந்தாலும் எனக்கு கவலையில்லை; அந்த நாளுக்கான தேவனுடைய வார்த்தை வாக்களிக்கப்பட்டதை அவர்கள் காணும்போது, ரூபகாரப்படுத்தப்பட்டு, வாக்குத்தத்தம் பண்ணப் பட்டிருக்கிறபடியால், அவைகளை எதுவுமே தடுத்து நிறுத்தப் போவதில்லை. "ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்." அவர்கள் கூறியபோது... 44. மோசே, "நம்முடைய தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்" என்றான். 45. இந்த மனிதன் வந்து அவர் செய்த காரியங்களை செய்வதை அவர்கள் கண்டபோது, அது மேசியாவாயிருந்தது என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். அது செய்யப்பட்டதை பிலிப்பு கண்டபோது, அவன், "நீர் கிறிஸ்து, நீரே இஸ்ரவேலின் ராஜா" என்றான். வார்த்தை அதை வாக்குத்தத்தம் செய்திருந்தபடியால் அவன் அதை அறிந்திருந்தான், அது அந்த நாளில் ஜீவித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ பரிசேயர்களும், சதுசேயர்களும், தெய்வீக வேதசாஸ்திரிகளும் சுற்றி நின்று கொண்டிருந்த போதிலும், அது அவனை ஒரு துளியும் தடுத்து நிறுத்தவில்லை, ஏனென்றால் அவன் அந்த அடையாளத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அது நிறைவேறியதை அவன் கண்டபோது, அதுவே அந்த வேளையின் அடையாளமாயிருந்தது. அதைத்தான் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர், தேவனுடைய வழி அருளப்பட்டது. ஆம், ஐயா. 46. இப்பொழுது உங்களால் கல்வியறிவை, ஒரு வாத்துக்குக் கொடுக்க முடியாது. அவனால் அதைச் செய்ய முடியவில்லை. அது அதை விரும்பாது. மற்ற வாத்துக்கள் அதனைப் பின்தொடராது, அது எவ்வளவுதான் பட்டங்களை உடையவனாயிருந்தான் என்று அவன் கூற முடிந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. "இப்பொழுது, இங்கே பாருங்கள், நான் வாத்துகளின் பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். அதைக் குறித்த எல்லாவற்றையும் நான் அறிவேன். நான் பட்டம் பெற்றுள்ளேன். இந்த எல்லாக் காரியங்களையும் நான் அறிவேன்." அது சிறிதளவும் நன்மை செய்யாது. மற்ற வாத்துக்கள் எதுவுமே அதனைப் பின் தொடராது, அவைகள் அசலான வாத்துக் களாயிருந்தால், ஆமென், ஏனென்றால் அவைகள் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. அவைகள் அந்த அடையாளத்தைக் காணும்போது, அவைகள் அதை விசுவாசிக்கின்றன. 47. ஒரு வாத்து அதை அறிந்துகொள்ள ஒரு வழி இருக்குமானால், மறுபடியும் பிறந்த ஒரு கிறிஸ்தவனைக் குறித்து என்ன? நாம் இயேசு கிறிஸ்துவை அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அறிந்து கொள்ள வேண்டும். சரி. தேவன் அருளிய வழியில் தேவன் அதைச் செய்கிறார். 48. நினைவிருக்கட்டும், கல்வியானது தேவன் அருளியிருக்கிற ஸ்தானத்திற்கு அவர்களை வழி நடத்தும் கருவியாக இருக்காது. அவர்கள் வைத்திருக்கும் கருவி உள்ளுணர்வு. அந்த உள்ளுணர்வு தேவன் அருளியிருக்கிற ஸ்தானத்திற்கு அவைகளை கொண்டு செல்லும் என்பதை அவைகள், அந்த வாத்துக்கள் அறிந்திருக்கின்றன. 49. அவ்வாறே பரிசுத்த ஆவியானவர் சபையை தேவன் அருளியிருக்கிற ஸ்தானத்திற்கு கொண்டு செல்கிறார். ஒரு சபையில் சேர்ந்து கொள்வதற்கல்ல, ஆனால் அவருடைய வார்த்தை வெளிப்படுவதை, ரூபகாரப்படுத்தப்படுவதைக் காண, அவருடைய பிரசன்னத்தினால் நிரப்பப்பட வேண்டும். தேவன் ஜனங்களுக்காக அருளியிருக்கிற ஸ்தானத்திற்கு அவர்களைக் கொண்டு வரும்படிக்கு, அதுவே சபைக்காக, எப்பொழுதும், அவர்களுக்காக தேவனால் அருளப்பட்ட வழியாய் உள்ளது. அந்தவிதமாகத்தான் இன்றைக்கும் சபை இருக்க வேண்டும். இப்பொழுது, அது உண்மையென்று நாம் அறிவோம். 50. ஒரு சிறந்த வழி இல்லை...ஒரு குழந்தை விரும்புவதைப் பெறுவதற்கு அதற்காக அழுவதைக் காட்டிலும் ஒரு மேலான வழியை அவர்கள் ஒருபோதும் கண்டறியவில்லை. நீங்கள் அவனிடம் ஒரு மணியைக் கொடுத்து, "சிறுவனே, நீ பிறந்து மூன்று நாட்களே ஆகிறது, ஆனால் இப்பொழுது விரும்பும்போது, நீ உன் புட்டியை வேணும்போது, இந்த மணியை உயர்த்தி அதை ஒலிக்கச் செய்" என்று கூறி, அது கிரியை செய்கிறதா என்று பாருங்கள். அது கிரியை செய்யாது. குழந்தை தனக்குத் தேவையானதற்காக அழுகிறது. அது தேவனால் அருளப்பட்ட வழி. நீங்கள் அதிகமாக சத்தமிட்டு அழும்போது...அந்த சிறுவனை சாட்டையால் அடிக்காதீர்கள், அவன் தேவனுடைய அருளப்பட்ட வழியை மாத்திரமே பின்பற்றிக்கொண்டிருக்கிறான். அவன் ஏதோ ஒன்றை விரும்புகிறான். அது உண்மை. அவன் தன்னுடைய தாயை அழைக்க அறிந்த ஒரே வழி அதுவே; அதற்காக கதறுகிறார்கள், அதற்காக அழுகிறார்கள். அது உண்மை. 51. தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக இதை சிபாரிசு செய்கிறார். தேவன் தம்முடைய விசுவாசமுள்ள பிள்ளைகளுக்காக இதை சிபாரிசு செய்கிறார். அவர் அதைச் செய்தார். அறிவுப்பூர்வமான பேச்சுகளை அல்ல, ஏதோ ஒரு பெரிய வேத சாஸ்திரத்தை, போதிக்க வேத சாஸ்திரத்தை அல்ல. உங்களுடைய தேவைகளுக்காக நீங்கள் அழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அது உண்மை, அதற்காக கூக்குரலிடுங்கள்! நீங்கள் மிகவும் விறைப்பாகவும், வெற்றாச் சாரமுறையாகவும் இருந்தால், நீங்கள் அதை ஒருபோதும் பெற்றுக்கொள்ளவேமாட்டீர்கள். நீங்கள் உங்களை சற்று திகிலடையச் செய்து, அழ ஆயத்தமாயிருந்தால், தேவன் அதை உங்களுக்குத் தருவார். அவருடைய பிள்ளைகள் அழுவதை அவர் கேட்க விரும்புகிறார். உங்களுடைய தேவைகளுக்கு தேவனிடத்தில் முறையிடுங்கள்! தேவன் அதை விரும்புகிறார். அதுவே அவருடைய அருளப்பட்ட வழி. அதற்காக கதறுங்கள்! அந்தவிதமாகத்தான் குழந்தை அழுகிறது; அந்தவிதமாகவே நீங்கள் அழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். "எவ்வளவு நேரம் அழ வேண்டும்?" 52. ஒரு குழந்தை எவ்வளவு நேரம் அழுகிறது? அவன் திருப்தியடையும் வரை. தேவனுடைய பிள்ளையான, விசுவாசிக்கிற கிறிஸ்தவனும் அந்தவிதமாகத்தான் செய்ய வேண்டும். தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளதை நீங்கள் கண்டால், அதை விட்டுவிடாதீர்கள், அதற்கு பதிலளிக்கப்படும் வரை கதறுங்கள். தேவன் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்துவதை நீங்கள் காணும் வரை கதறுங்கள். தேவன் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்தி, அது இங்குள்ளது என்று நிரூபிக்கும்போது, அப்பொழுது நீங்கள் கதற வேண்டியதில்லை; நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டீர்கள், நடந்து சென்று அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறீர்கள். நீங்கள் அதைச் செய்யும் வரை, நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளும் வரை சத்தமிடுங்கள். விடாப்பிடியாக, பற்றிக் கொள்ளுதல், நான் அதை விரும்புகிறேன். 53. ஒரு கலப்பினச் செடியல்ல, குழந்தையாக, செல்லமாக வளர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. கிறிஸ்தவர்கள் உண்மையாக, அசலாக, பிறந்த, தேவனுடைய பாகங்களாயிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய ஸ்தானத்திற்காக சண்டையிட்டு, அவர்கள் இந்த பூமியில் முடிவுறும் வரை போராடுகிறார்கள். அதனுடைய ஒவ்வொரு அசைவும் ஒரு போராட்டமாகவே உள்ளது. 54. தேவன் மோசேக்கு தேசத்தை அளிப்பதாக அவனிடத்தில் சொன்னார். அவர் யோசுவாவிடம், "நான் உங்கள் காலடி, மிதிக்கும், எவ்விடத்தையும் உங்களுக்கு கொடுத்துள்ளேன்" என்று கூறினார். அதன் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் அவர்கள் போராட வேண்டியதாயிருந்தது. எனவே நாம் அதனுடைய ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் போராடுகிறோம். அது சிறுகுழந்தையைப் போல செல்லமாக தட்டிக்கொடுத்து, அந்தவிதமாக, "பாருங்கள், நான் உங்களை அங்கு அழைத்துச் செல்வேன், நீங்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று பாருங்கள். நீங்கள் உங்களுடைய கருத்தை அனுப்புங்கள்" என்று கூறுகிற ஏதோ ஒரு காரியம் அல்ல. அந்த விதமாக வருவது சரியான வழியே இல்லை. 55. ஒரு தீர்மானத்தோடு வாருங்கள். அது முடிவடையும் வரை நீங்கள் அங்கேயே இருக்கப் போகிறீர்கள் என்று வாருங்கள். தேவன் பதிலளித்து ரூபகாரப்படுத்தும் வரைக்கும் அங்கேயே தரித்திருங்கள். தேவனில் விசுவாசமுள்ள ஒரு மனிதனால், தேவனுடைய பிரசன்னத்தைக் காண முடிகிறது, தேவனுடைய பிரசன்னத்தை உணர முடிகிறது, தேவனுடைய பிரசன்னத்தை உணர்ந்து, அவர் இங்கிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்த நாளில் அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் பதிலளிக்க அவர் இங்கே இருக்கிறார். அதன்பின்னர், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளும் வரை கதறுங்கள்! அவரைப் பற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் இரவும் பகலும் தரித்திருக்க வேண்டியதாயிருந்தால், விட்டுவிடாதீர்கள். தேவன் தம்முடைய பிள்ளைகள் அறிவாற்றலுள்ள பேச்சுகளுக்கு செவிகொடுக்க விரும்புகிறதில்லை. வாக்குத்தத்தம் ரூபகாரப் படுத்தப்படும் வரையில், அவர்கள் அதற்காக கதற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். 56. இங்கே ஆபிரகாமுக்கு ஒரு பலி தேவைப்பட்டது. என்ன நடந்தது? தேவன் அவனுக்கு ஒரு ஆட்டுக்குட்டியை அளித்தார். அது தேவனால் அளிக்கப்பட்ட வழியாய் இருந்தது. அவருக்கு ஒரு பலி தேவைப்பட்டது, எனவே தேவன் அதை அருளினார். பிற்காலத்தில் அவன் அந்த ஸ்தலத்தை யேகோவா-யீரே என்று அழைத்தான், "கர்த்தர் தமக்காக ஒரு பலியை அருளுவார்." 57. இப்பொழுது, யோபு, ஒரு காலத்தில், பண்டைய தீர்க்கதரிசி, யோபு. அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் பிரச்சனையில் சிக்கியிருந்தான். சாத்தான் அவனைச் சோதிக்க விரும்பியிருந்தான், அவன் அவனைப் பருக்களினால் வாதித்தான். அவன் அவனுடைய பிள்ளைகளை எடுத்துக்கொண்டான், அவன் அவனுடைய கால்நடைகளை எடுத்துக்கொண்டான், அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் அவன் எடுத்துக்கொண்டு, அவனுக்கு பருக்களை உண்டாக்கினான். 58. அவருடைய தேற்றவாளர்கள் வந்து, அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அவனை ஏளனமாக ஏளனம் செய்து, கேலி செய்து, "ஏன், நீ இரகசியமாய், பாவம் செய்தாய்" என்று கூறினர். 59. யோபு அப்படியே நிலைத்திருந்தான். அவன் கதறினான். அவன் தேவனுடைய கற்பனைகளைப் பின்பற்றிக் கொண்டிருந்தான் என்பதில் அவன் நிச்சயமுடையவனாயிருந்தான். தேவன் செய்வதாக வாக்களித்திருந்ததை அவன் சரியாக செய்திருந்தான். சர்வாங்க தகனபலியின் கீழ், அவனோடு தேவன் நிற்பதாக அவர் அவனுக்கு வாக்களித்திருந்தபடியால், அவன் அங்கேயே தரித்திருந்தான். 60. எனவே, தேவன் அவனுக்கு ஒரு தரிசனத்தை அருளினார். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் என்ன கண்டான்? அவன் வார்த்தையை, இயேசு கிறிஸ்துவைக் கண்டான். அவன், "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். கடைசி நாட்களில் அவர் பூமியின் மேல் நிற்பார். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு, நான் என் மாசத்தில் இருந்து தேவனை பார்ப்பேன்" என்றான். பாருங்கள், அவர் அவனுக்காக உயிர்த்தெழுதலின் தரிசனத்தை அருளினார். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், அவன் வார்த்தையைக் கண்டான். அவன் வார்த்தையைக் கண்டான் மற்றும் அவனுடைய எலும்புகளும், அவனுடைய சரீரமும் கடைசி நாளில் உயிர்த்தெழும் என்பதை அவன் அறிந்திருந்தான். தேவன் எங்கே இருக்கிறார் என்று அவனுக்குத் தெரியுமா, அவனால் மாத்திரம் காண முடிந்ததா என்று அவனிடம் கேள்வி கேட்கப்பட்டது. 61. அவன், "ஒரு மலர் மரித்து, அது மீண்டும் எழும்புகிறது; ஒரு மரம் மரித்து, அது மீண்டும் எழும்புகிறது; ஒரு மனிதன் படுத்து, ஜீவனைக் கொடுத்து, வீணாகப் போகிறான், அவன் எங்கே? ஓ, நீர் என்னை பாதாளத்தில் ஒளித்து, உம்முடைய கோபம் தீருமட்டும் என்னை அந்தரங்கமான இடத்தில் மறைத்து வைத்தால் நலமாயிருக்கும்" என்றான். 62. அப்பொழுது இடிமுழக்கங்கள் முழங்கத் தொடங்கின, மின்னல்கள் பிரகாசிக்கத் தொடங்கின, கர்த்தருடைய ஆவியானவர் தீர்க்கதரிசியின் மேல் இறங்கி வந்தார். அவன் எழும்பி நின்று, அவன் கர்த்தருடைய வருகையைக் கண்டு, அவன், "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாட்களில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். எந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்" என்று சத்தமிட்டான். தேவன் வார்த்தையை, இயேசு கிறிஸ்துவை அளித்தார், அவன் அவரைக் கண்டு, அவரைத் தன்னுடைய மீட்பர் என்று அழைத்தான். 63. இஸ்ரவேலருக்கு எகிப்திலிருந்து வெளியேற ஒரு வழி தேவைப்பட்டது, தேவன் அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அருளினார், ஒரு தீர்க்கதரிசி ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை ரூபகாரப்படுத்தினான். சரியாக, தேவனால் அருளப்பட்ட வழி! அவர்களால் ஒரு போர் வீரனுக்கு பயிற்சி அளிக்க முடியவில்லை, அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை, அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. அவர்கள் செய்த ஒரே காரியம், தேவனுடைய அருளப்பட்ட வழிக்காக காத்திருந்ததுதான். மேலும் அவர் சொன்னார், "நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அந்த ஜனங்களை வெளியே கொண்டு வருவார். அவருடைய ஜனங்கள் அடிமைத்தனத்தில் இருப்பார்கள், ஆனால் அவர் அவர்களை ஒரு பலத்த கரத்தினால் வெளியே கொண்டு வருவார். அவர் தம்முடைய அடையாளங்களையும், அற்புதங்களையும் காண்பித்து, அந்த தேசத்தில் மகிமையைப் பெறுவார்" என்று கூறினார். 64. அவர்கள் கதறி அழுதபோது, இதோ அந்த மனிதன் இறங்கி வந்தான்! இப்பொழுது நினைவிருக்கட்டும், அந்த நேரம் நிறைவேறும் வரை, எல்லா கூக்குரலும் அவர்களை விடுவிக்கவில்லை. 65. இன்றைக்கு நாம் கண்டு கொண்டிருக்கிற இந்தக் காரியங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சம்பவித்திருக்க முடியாது. இன்றைக்கு அது சம்பவிக்கிறது. இதுவே அந்த வேளையாயிற்றே! இதுவே அதற்கான சமயம்! இப்பொழுது அது நிறைவேறும் நேரம் வந்துவிட்டது. ஏன்? தேவன் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார், இதோ அது உள்ளது. 66. அவர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்பே, "பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மறுபடியும் இருக்க முடியாது" என்று கூறினர். அவர்கள், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, "பரிசுத்த ஆவியினால்..." என்றனர். ஆனால் பெந்தேகோஸ்தே ஜனங்களாகிய நீங்கள், அது பரிசுத்த ஆவியைப் பொழிவதற்கான தேவனுடைய வேளையாயிருந்தது என்பதை அவர்களுக்கு நிரூபித்தீர்கள். மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன் என்னதான் கூறினபோதிலும் கவலைப்பட வேண்டியதில்லை, நீங்கள் சரியாக தேவனுடைய வார்த்தையோடு தரித்திருந்தீர்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வரும் வரை தைரியமுள்ள மனிதர்கள் அங்கு புறப்பட்டுச் சென்று, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி தேவனை மகிமைப்படுத்தினார்கள். எவருமே உங்களுக்கு எந்த வித்தியாசத்தையும் கூற முடியாது. தேவனே தம்முடைய சொந்த வியாக்கியானியாயிருக்கிறார்; நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அதை விளக்கிக் கூற முடியாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனை யார் விளக்கிக் கூற முடியும்? யாராலும் முடியாது. 67. தேவன் எப்படி ஒரு தரிசனத்தைக் காண்பிக்க முடியும் என்பதை என்னால் கூற முடியாது, ஆனால் அது சம்பவிக்கிறது என்பதை நான் அறிவேன். தேவனால் எப்படி இந்தக் காரியங்களைச் செய்ய முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதை விளக்கிக் கூறுவது என்னுடைய வேலை அல்ல. அவர், தனிமையாய் நிலைத்திருக்கிறார். அவர் ஏலோகிம், தன்னிறைவு பெற்ற ஒருவர். நான் அவருடைய ஊழியக்காரன். அவர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்பதை நான் அறிவேன், அது இங்கே உள்ளது என்பதையும் நான் அறிவேன். அந்த ஒரு காரியம்தான் எனக்குத் தெரியும். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை, நான் அறிவேன். அவர் இதை வாக்குத்தத்தம் செய்தார் என்பதை நான் அறிவேன், தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை உண்மையாக்க இங்கிருக்கிறார். ஆம். தேவனால் அளிக்கப்பட்ட வழி! 68. இஸ்ரவேலருக்கு வார்த்தையை ரூபகாரப்படுத்தின, ஒரு தீர்க்கதரிசி அளிக்கப்பட்டது, அவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர். இந்த தீர்க்கதரிசி, மோசே, அவன் பல ஆண்டுகள் வனாந்திரத்தில், நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தான், இந்த ஜனங்களோடு போராடி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அவர்களை கொண்டு செல்லும் வரையில் அவர்களை வைத்திருக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். அது ஒரு நிலைக்கு வந்தபோது, அந்த மனிதன் மரிக்க வேண்டியதாயிருந்தது; அவன் நூற்றிருபது வயதுடையவனாயிருந்தான். அவன் மரிப்பதற்கு ஒரு இடமும் இல்லை. அவன் மரிக்க ஆயத்தமானபோது, தேவன் அவனுக்கு ஒரு கன்மலையை அருளினார்; அவன் வனாந்திரத்தில் அடித்திருந்த அந்த கன்மலை, அவர்களைப் பின் தொடர்ந்து வந்த அந்த கன்மலை, அவர்கள் அதிலிருந்தே குடித்திருந்தனர். தேவன் அவனுக்கு ஒரு கன்மலையை, மரிக்க ஒரு இடத்தை அருளினார், அங்கே மோசே ஒரு கண்ணியமான மரணத்தில் மரிக்க முடிந்தது. 69. தேவனே, அந்த அதேக் கல்லின் மேல் நான் மரிக்கட்டும்! அங்குதான் நான் விரும்புகிறேன். அந்தக் கன்மலை கிறிஸ்து இயேசுவாயிருந்தது. ஆம், ஐயா. 70. அவன் மரித்தப் பிறகு, அந்தக் கன்மலையின் மேல், அவனுக்குத் சரீரத்தை தூக்கிச் செல்பவர்கள் தேவையாயிருந்தனர். தேவன் அவனுக்கு ஒரு கூட்ட தூதர்களை அனுப்பினார். ஏன் அவனுடைய ஒரு கூட்ட மூப்பர்கள் இல்லை? ஏனென்றால் அவன் போய்க் கொண்டிருந்த இடத்திற்கு தூதர்களைத் தவிர, வேறு எவராலும் அவனைக் கொண்டு செல்ல முடியாது. அவர்கள் அவனைத் தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாகக் கொண்டு சென்றனர், அவனுக்கு சரீரத்தை தூக்கிச் செல்பவர்கள் தேவைப்பட்டனர், தேவன் அதை அருளினார். அவன் தேவனால் அருளப்பட்ட வழியில் சென்றான். அல்லேலூயா! 71. ஏனோக்கு தேவனோடு ஐநூறு ஆண்டுகள் சஞ்சரித்தான், அவன் அவரைப் பிரியப்படுத்தினான். வீட்டிற்குச் செல்ல அவனுக்கு ஒரு பெரும்பாதை தேவைப்பட்டது. தேவன் அதை அருளினார். 72. எலியா யேசபேலை வர்ணம் பூசப்பட்ட அவளுடைய முகத்தைக் குறித்தும், அவளுடைய வழியிலேயே எல்லா ஜனங்களும் செய்து கொண்டிருந்ததைக் குறித்தும் சபித்திருந்தான். அவன் சோர்வுற்று, களைப்புற்று வீடு செல்ல ஆயத்தமாயிருந்தான். அவன் யோர்தானைக் கடந்து செல்ல முடியாதபடி அவன் மிகவும் வயோதிகனாயிருந்தான். யோர்தானைக் கடக்க தேவன் அவனுக்கு ஒரு வழியை அருளினார். அவன் தேவனை சந்திக்க, பரலோகத்திற்கு செல்ல விரும்பினான்; தேவன் ஒரு அக்கினி இரதத்தையும், குதிரைகளையும் அனுப்பி, அவனை மேலே கொண்டு சென்றார். தேவனால் அருளப்பட்ட வழி. தேவனால் அருளப்பட்ட வழி. அவர் எப்பொழுதுமே அதை சரியாக செய்கிறார். சரி. ஆம், ஐயா. தேவன் எப்பொழுதுமே ஒரு வழியை அருளுகிறார். ஆம். 73. வானசாஸ்திரிகள், அவர்கள் பாபிலோனிலிருந்து தங்களுடைய பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் வேறு வழியாக செல்ல விரும்பின ஒரு வழியைப் பார்த்துக் கொண்டிருந்தனர், ஏனென்றால் இந்த ராஜா பிறக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களுக்கு ஒரு திசைகாட்டி தேவைப்பட்டது; தேவன் ஒரு நட்சத்திரத்தை அளித்தார். அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டனர். திசைகாட்டும் கருவிகள் அவர்களுக்குத் தேவையில்லை; அவர்கள் அந்த நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்தனர். அது தேவனால் அருளப்பட்ட வழியாய் இருந்தது. தேவன் ஒரு வழியை அருளினார், அவர்கள் பரிபூரண ஒளியைக் கண்டறியும் வரையில் அவர்கள் நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தனர். ஓ! 74. ஒரு நாள், உலகத்திற்கு ஒரு இரட்சகர் தேவையாயிருந்தது. அவர்கள் இழக்கப்பட்டனர்; அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை. அவர்கள் இரட்சிக்கப்பட்டதாக எண்ணினர். ஆனால் அவர்களுக்கு ஒரு இரட்சகர் தேவையாயிருந்தது, தேவன் இரட்சகருக்காக ஒரு குமாரனை அருளினார். ஏன்? வேறு எவரும் அதைச் செய்ய முடியாது. பூமியின் மேலிருந்த எந்த மனிதனும், பரலோகத்திலும், எந்த இடத்திலும் அதைச் செய்ய முடியவில்லை. தேவன் ஒரு கன்னிகையின் மேல் நிழலிட்டார், அவள் கர்ப்பவதியாகி ஒரு ஆண்-பிள்ளையைப் பெற்றாள். அந்த ஆண்-பிள்ளை யூதரோ அல்லது புறஜாதியோ அல்ல. அவர் தேவனாயிருந்து, மாம்சத்தில் வெளிப்பட்டார், அந்த ஒருவர் மாத்திரமே மீட்க முடிந்தது. அவருடைய இரத்தம் நம்மை இரட்சிக்கிறது. அவருடைய இரத்தம் நம்மை குணமாக்குகிறது. அவர் அளித்துள்ள எந்த வாக்குத்தத்தத்திற்கும், நாம் அந்த இரத்தத்தின் பேரில் நிற்க முடியும். தேவன் அதைச் செய்வதாக வாக்குப்பண்ணினார். 75. தேவன் ஆராதிக்கிறவனை மாத்திரமே இரத்தத்தினூடாகவும், இரத்தத்தின் கீழும் சந்திக்கிறார். இஸ்ரவேலருக்கு தேவனை சந்திக்க ஒரு இடம் இருந்தது. ஒரு...இன்றைக்கு, தேவனுக்கு ஒரு இடம் உண்டு, அதாவது அவர்-அவர் தொழுதுகொள்பவரை சந்திக்கிறார்; மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு அல்லது பெந்தேகோஸ்தேவில் அல்ல. அவர் அவர்களை இரத்தத்தின் கீழ் சந்திக்கிறார். தேவன் அருளியுள்ள ஒரே இடம் அதுதான்; ஸ்தாபனத்தில் அல்ல, ஒரு சங்கத்தில் அல்ல. ஆனால் இரத்தத்தில்தான் இயேசு கிறிஸ்து தம்முடைய தொழுது கொள்பவரை சந்திக்கிறார். "நான் இரத்தத்தைக் காணும்போது!" அது தேவனால் அருளப்பட்ட வழி. 76. அவர்கள் அவரைக் கண்டபோது, அவர் மேசியாவாயிருந்தார் என்பதை, சபையானது முற்றிலுமாக உறுதியாக நம்பினதே! 77. கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீக்கு, அவளுக்கு ஒரு இரட்சகர் தேவைப்பட்டபோது, அவளுக்கு காண்பிக்க ஏதோ ஒரு காரியம் தேவைப்பட்டது. அவள் சபைக்கும் மற்ற ஒவ்வொரு காரியத்திற்கும் சென்றிருந்தாள், அவள் ஒரு விபச்சாரியாக மாறுமளவிற்கு, அவர்கள் இந்தக் கோட்பாட்டையும், அந்தக் கோட்பாட்டையும் கண்டிருந்தனர். அது அவளை வீதியில் தள்ளியது. ஒரு நாள், சுமார் பகல் பதினொரு மணிக்கு, அவள் ஒரு வாளி தண்ணீர் கொண்டு வரப்போவதாக இருந்தாள், அங்கே ஒரு மனிதன் அமர்ந்திருந்தார்; இந்த சிறிய பரந்த காட்சியில், இங்குள்ள ஒரு யூதன். அவள் கூறினாள்... 78. அவள் தண்ணீர் மொண்டு கொள்ளும்படி, தன்னுடைய வாளியை கயிற்றில் கட்டி கீழேயிறக்கினபோது, "ஸ்திரீயே, எனக்கு தண்ணீர் கொண்டுவா" என்று ஒரு மனிதன் கூறுவதை அவள் கேட்டாள். அவள் கூறினாள்... 79. அவள் துரிதமாக திரும்பி, அவரை ஒரு சாதாரண யூதன் என்று எண்ணினாள், ஏனென்றால் அவர் சரீரத்தைப் பொருத்தமட்டில் மானிடனாய் இருந்தார். அவர் ஒரு மனிதனாயிருந்தார்; நம்மைப் போலவே, புசித்து, குடித்து, உறங்கினார். அவர் மரிக்கக்கூடிய அளவுக்கு அதிகமான மானிடனாய் இருந்தார், அதே சமயத்தில் அவர் தேவனாயிருந்தார். அதன்பின்னர் நாம் கண்டறிவோம், அதாவது... 80. "யூதர்களாகிய நீங்கள் சமாரியர்களிடத்தில் இப்படிப்பட்ட காரியங்களைக் கேட்பது வழக்கம் அல்ல" என்றாள். 81. அவர், "ஆனால் நீ யாரிடத்தில் பேசிக்கொண்டிருந்தாய் என்பதை நீ அறிந்திருந்தாயானால், அப்பொழுது நீ என்னிடம் தாகத்திற்குக் கேட்பாய்" என்றார். "போய் உன்னுடைய புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா" என்றார். அவள், "எனக்குப் புருஷன் இல்லை" என்றாள். 82. மேலும், "நீ உண்மையைக் கூறியிருக்கிறாய். உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள், இப்பொழுது நீ வாழ்ந்து கொண்டிருக்கிறவன் உன்னுடையவனல்ல" என்றார். என்ன நடந்தது? தேவன் அவளுக்காக ஏதோ ஒன்றை அளித்திருந்தார். 83. அவள், "ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். மேசியா வரும்போது, அவர் இந்தக் காரியங்களை எங்களுக்கு அறிவிப்பார் என்பதை நாங்கள் அறிவோம். அதைத்தான் அவர் செய்வார். வார்த்தை அவ்வண்ணமாய்க் கூறுகிறது. நாம் அதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். நான் சுகவீனமடைந்து, இந்த எல்லா காரியங்களைக் குறித்தும் களைப்புற்றிருக்கிறேன், அவர்களுடைய கோட்பாடுகளையும் மற்ற காரியங்களையும், பரிசேயர்கள், சதுசேயர்கள், ஏரோதியர்கள், அது என்னவா யிருந்தாலும் சரி. ஆனால் அவர் வரும்போது, ஒரு மேசியா வருகிறார் என்பதை நாங்கள் அறிவோம். நீர் அதைக் குறித்து என்னக் கூறுகிறீர்?" என்றாள். 84. அவர், "நானே அவர்" என்றார். ஆமென்! தேவன் ஒரு வழியை அளித்திருந்தார். அவள் தண்ணீர் குடத்தை விட்டு, ஒரு மாற்றப்பட்ட ஸ்திரீயாக, நகரத்திற்குள் ஓடி, "நான் செய்த காரியங்களை எனக்குச் சொன்ன ஒரு மனிதனை, வந்து பாருங்கள். இது மேசியா அல்லவா?" என்றாள். 85. பேதுரு அந்திரேயாவின் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தான், அநேக முறை அதைக் கேட்டிருந்தான், யோவான் ஒரு மனிதனை, ஒரு மேசியாவை அறிமுகப்படுத்துவதையும், இந்த எல்லாக் காரியங்களும் சம்பவிக்கிறதை குறித்து அந்திரேயா பேசுவதைக் கேட்டான். இவையாவும் பேதுருவுக்கு புரியாத புதிராக இருந்தது. ஆனால் ஒரு நாள் அவன் இயேசுவைக் காண அந்திரேயாவுடன் வந்தான். அவன் இயேசுவின் பிரசன்னத்திற்கு வந்தபோது, இயேசு அவனை நோக்கிப் பார்த்து, அப்பொழுது அவர், "உன் பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்" என்றார். தேவன் தாம் யாராயிருந்தார் என்பதைக் காணும்படியான வழியை பேதுருக்கு அளித்திருந்தார். அவரே அந்த மேசியாவாயிருந்தார். 86. இப்பொழுது இயேசுவானவர் மரித்து, பரலோகத்திற்கு ஏறிச் சென்ற பிறகு, சபைக்கு சாட்சி கொடுக்க வல்லமை தேவைப்பட்டது என்று, நாம் கண்டறிகிறோம். தேவன் அவர்களுக்கு ஒரு பெந்தெகொஸ்தேயை அளித்தார். அவர் ஒரு பெந்தேகோஸ்தேவை அளித்தார். 87. நண்பர்களே, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த கடைசி நாட்களில், நாம் அவ்வாறே பெற்றுள்ளோம், மனிதன் கிறிஸ்தவ மார்க்கத்தின் முறைமைக்குள் நுழைந்து, அதை மீண்டும் தாறுமாறாக்கி, கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் வல்லமையும், உண்மையான காரியமும் நடைமுறையில் இழக்கப்படுமளவுக்கு, அது கோட்பாடுகளோடும், சபைகளோடும், ஸ்தாபனங்களோடும், அறிவுப்பூர்வமான பேச்சுகளோடும் அதைக் கலப்பினமாக் கியிருக்கிறான். இந்த கடைசி நாட்களில் என்ன நடக்கும், என்ன நடக்கும் என்று வாக்குறுதியளிக்கப்பட்ட வார்த்தையுடன் இங்கே இருக்கிறோம்; மனிதன் அதை விசுவாசிப்பதில்லை. அவர்கள் அதிலிருந்து விலகிச் சென்றுவிட்டனர். அவர்கள் ஒரு கிறிஸ்தவரா என்று நீங்கள் அவர்களிடம் கேளுங்கள்; "நான் இன்னார்-இன்னாரை சேர்ந்தவன்" என்று கூறுவார்கள். அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. நீங்கள் பிறப்பின் மூலம் கிறிஸ்தவராக இருக்க வேண்டும். இப்பொழுது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் முழு காரியத்திலும் மீண்டும் ஒரு பாபிலோனுக்குள் வந்துவிட்டோம். 88. இன்றைக்கு சபைக்கு மீண்டும் வல்லமையும் சத்தியமும் தேவைப்படுகிறது. ஓ! தேவன் தம்முடைய குமாரனை எழுப்பினார், இது கவனிக்கப்பட வேண்டும், ஏனென்றால் அவர், "இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது; நீங்கள் என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் கூட இருப்பேன்" என்றார். நாம், எபிரெயர் 13:8-ல், "அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று கண்டறிகிறோம். 89. மல்கியா 4-ல், கடைசி நாட்களில் அவர் நமக்கு ஒரு செய்தியை வாக்குத்தத்தம் செய்தார் என்றும், அது "ஜனங்களின் விசுவாசத்தை பிதாக்களிடத்திற்குத் திருப்பும்" என்றார் என்பதை, நாம் கண்டறிகிறோம். கடைசி நாட்களில், அவர் அதை வாக்குப்பண்ணினார். 90. அவர், யோவான் 14:12-ல், "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், இதைப் பார்க்கிலும் அல்லது இதைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்" என்றும் கூட வாக்களித்தார். 91. அவர் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள், "போதகரே, எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும்" என்றனர். 92. அவர், "பலவீனமான விபச்சார சந்ததி ஒரு அடையாளத்தைத் தேடுகிறது" என்றார். அந்த சந்ததியில்தான் நாம் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர், "நான் அவர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பேன். யோனா மீனின் வயிற்றில், மூன்று இரவும் பகலும் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் பூமியின் இருதயத்தில் மூன்று பகலும் இரவும் இருக்க வேண்டும்" என்றார். 93. ஒரு பொல்லாத விபச்சார சந்ததி என்ன விதமான ஒரு அடையாளத்தைக் கண்டறியும்? உயிர்த்தெழுதலின் அடையாளம். அதுதான் இன்றைக்கு நமக்கு வாக்குத்தத்தம் பண்ணப் பட்டிருக்கிறது, அவர் அவர் இன்னும் உயிரோடிருக்கிறார் என்பதற்கு உயிர்த்தெழுதலின் அடையாளமாக, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 94. நேற்றிரவு நாம் அதை ஆராய்ந்தபோது, அவர், "லோத்தின் நாட்களில் நடந்தது போல" என்றார். "லோத்தின் நாட்களில், லோத்தின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்." இந்தக் காரியங்கள், இன்னும் அநேக வேதவாக்கியங்கள் நமக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளன. நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் இருக்க..."இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது. காஸ்மாஸ், 'அந்த ஒழுங்கு, சபைக்காலம்,' அவர்கள் இனிமேல் என்னைக் காணமாட்டார்கள். நீங்கள் என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும், காலத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன்." "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்." அது என்ன? அது தேவனால் அருளப்பட்ட அடையாளம், தேவனால் அருளப்பட்ட வழி. 95. ஆபிரகாம் குமாரனுக்காக காத்திருக்கிறான். புறஜாதிகளின் அழிவிற்கு முன்னர் அவன் கண்ட கடைசி அடையாளம், தேவன் மானிட சரீரத்தில் வெளிப்படுத்தப்பட்டார், சாராள் கூடாரத்தில் இருந்தபோது, அவளுடைய இருதயத்தின் இரகசியங்களை அறிந்திருந்தார். இயேசு, "அது மனுஷகுமாரன் வருகையில் திரும்ப வரும்" என்றார். சகோதரனே, சகோதரியே, நாம் அந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். இது வாக்குத்தத்தத்தின் நாள் என்று நான் விசுவாசிக்கிறேன். 96. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதில் உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும். நீங்கள் விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லையென்றால், நீங்கள் அதை யூகித்து...வெப்ஸ்டர் அகராதியின்படி, யூகித்தல் என்ற வார்த்தை, "அதிகாரமில்லாமல் துணிந்து செயல்படுதல்" என்று பொருள்படுகிறது. ஆனால் வார்த்தை அதை வாக்குத்தத்தம் செய்யும்போது, தேவன் அந்த வார்த்தையின் பின்னால் நிற்கும்போது, நீங்கள் இனிமேல் யூகித்துக் கொண்டிருக்கவில்லை. தேவன் செய்யும்படி கூறினதையே நீங்கள் சரியாக செய்து கொண்டிருக்கிறீர்கள், அவர் அதை ஆதரிக்க கடமைப்பட்டவராயிருக்கிறார். 97. மகத்தான, புகழ்வாய்ந்த, ஒரு-ஒரு எழுப்புதலாளர், அநேக ஆண்டுகளுக்கு முன்னர், நான் ஒரு சிறு பையனாக இருந்தபோது, பால் ரேடர் என்பவரைக் கண்டேன். ஒரு நாள், அவர் ஒரு கதையைக் கூறினார், அது என் மனதில் பதிந்துவிட்டது. அவர், "ஒரு நாள், நாங்கள் விறகு வெட்டிக் கொண்டிருந்தோம்" என்றார். அவர் ஓரிகானில், ஒரு மரம் வெட்டும் தொழிலாளியாயிருந்தார், அவருடைய முதலாளி அவரை மலையின் உச்சிக்கு செல்லும்படி கூறினதாகக் கூறினார். அவர் சொப்பனம் கண்டு கொண்டிருந்தார். அவர் உண்மையாகவே அந்த தீவுகளில் இருந்த, அந்த நேரத்தில், அவருக்கு மிகக் கடுமையான, காய்ச்சல் உண்டானது, அவர் மரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் ஒரு மருத்துவரை நாடிச் சென்றனர், ஆனால் அதற்குப் படகோட்டி மூலம், அநேக மைல்கள் தூரம் செல்ல வேண்டியதாய் இருந்தது. 98. மருத்துவர் அங்கு செல்வதற்கு முன்பே, பவுல் மெல்ல மெல்ல மெல்ல, சுகவீனமாகிக் கொண்டே போனார். அவர் தன்னுடைய உண்மையுள்ள மனைவியை அழைத்தார். அப்பொழுது அவர், "அன்பே, அறைக்குள் இருட்டாகிக் கொண்டேயிருக்கிறது. இருட்டாகி, மூடுகிறது" என்றார். அவர் மீண்டும் ஒரு மயக்க நிலையை அடைந்தார். 99. அவர் அவ்வாறு செய்தபோது, அவர் இந்த மயக்கத்தில் இருந்தபோது, அவருடைய முதலாளி அவரை ஒரு குறிப்பிட்ட மரத்தை வெட்டும்படி அனுப்பியதாக அவர் சொப்பனத்தில் கண்டதாகக் கூறினார். அவர் அந்த மரத்தைக் கண்டுபிடித்து, அவர் மரத்தை வீழ்த்தி, தன்னுடைய கோடாரியை அதில் குத்தி, அதை எடுக்க கீழே கை நீட்டினார். அவரால் அதை எடுக்க முடியவில்லை. அவருடைய பலம் குறைந்துவிட்டதாகக் கூறினார். அவரால் அதை எடுக்க முடியவில்லை. அவர், "அந்த மரத்தின் அளவு அவ்வளவுதான், நிச்சயமாக என்னால் அதை தூக்க முடியும். நான் மீண்டும் முயற்சிக்கட்டும்" என்றார். அவர் கீழே இறங்கி, அவர் தூக்கியபோது, அவர் களைப்புறும் வரைக்கும் முயற்சித்தார். அவர் மரத்தின் ஓரமாக அமர்ந்து, "நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. முதலாளி இந்த மரத்தை அங்கே முகாமில் கீழே கொண்டு வரும்படி கேட்கிறார். நான் அதை கீழே கொண்டு வர முடியாத அளவுக்கு பலவீனமாயிருக்கிறேன்" என்றார். 100. அவர் எப்போதும் கேட்டதிலேயே மிகவும் இனிமையான சத்தத்தைக் கேட்டதாகக் கூறினார், பேசியது அவருடைய முதலாளியாயிருந்ததாம்; ஆனால் அவர் தன்னுடைய எஜமான் யார் என்பதைக் காண திரும்பியபோது, அது கர்த்தராகிய இயேசுவாயிருந்தது, என்று கூறினார். அவர், "பால், நீ எதைக் குறித்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்? நீ எதைக் குறித்து குழப்பமடைந்திருக்கிறாய்? தண்ணீர் அங்கே ஓடுகிறதை நீ காண்கிறாயா?" என்று கேட்டார். மேலும், "நீ ஏன் மரக்கட்டைகளை ஆற்றில் எறிந்துவிட்டு, அதில் சவாரி செய்யக் கூடாது? அதன் மேல் சவாரி செய்து முகாமிற்குச் செல்" என்றார். 101. அவர் மரக்கட்டையின் மேல் குதித்து, சிற்றலைகளுக்கு மேலாக தன்னுடைய குரலின் உச்சக்கட்டத்தில் கூச்சலிட்டார். "நான் அதன் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறேன்! நான் அதன் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறேன்!" 102. சகோதரனே, சகோதரியே, இயேசு கிறிஸ்து இந்தக் காரியங்கள் கடைசி நாட்களில் சம்பவிக்கும் என்று வாக்குத்தத்தம் செய்துள்ளார். நாம் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அது எப்படி சம்பவித்தது என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் அதன் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறேன். அது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன், ஏனென்றால் அது சுவிசேஷம், தேவனால் அருளப்பட்ட வழி. இது நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தின் செய்தி என்று நான் விசுவாசிக்கிறேன். இது தேவனால் அருளப்பட்ட வழியாய் உள்ளது. நான் அதன் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறேன்! நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், நீங்கள் என்னோடு குதிக்கமாட்டீர்களா? 103. பரலோகப் பிதாவே, நாங்கள் உம்முடைய வார்த்தையின் மேல் மகிமைக்குள் சவாரி செய்து கொண்டிருக்கிறோம். உம்முடைய வார்த்தை சத்தியம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஓ தேவனே, ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும் இன்றிரவு வார்த்தையான கப்பலில் ஏறி, அவர்கள் யாத்திரையினூடாக செல்லுகையில், "நான் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறேன். அது என்னை நேராக மகிமைக்குள் கொண்டு செல்லும். அது இன்றைக்கு எனக்காக தேவனால் அருளப்பட்ட வழியாய் உள்ளது. 'இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று அவர்களால் சொல்ல முடியும் என்பதை, நினைவில் கொள்வார்களாக. 104. நீர், "இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; ஏனென்றால் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்" என்றீர். கர்த்தாவே, நாங்கள் உம்மைக் காண்போம் என்று நீர் எங்களுக்கு வாக்களித்தீர். 105. கிரேக்கர்கள் ஒரு சமயம் வந்து, "ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்றனர். அவர்களுக்கு அந்த சிலாக்கியம் அளிக்கப்பட்டது. இன்றிரவும், கர்த்தாவே, நாங்கள் உம்மைக் காண விரும்புகிறோம். அது எங்களுடைய இருதயத்தின் வாஞ்சையாயுள்ளது. அவர்கள் உம்மைக் விரும்பினாலொழிய, ஒருவரும் உம்மைக் குறித்துக் கேட்க முடியாது. அப்பொழுது இந்த கிரேக்கர்கள் உம்மைக் காண அனுமதிக்கப்பட்டிருந்தால், நாங்கள் உம்மைக் காண நீர் ஒரு வழியை அருளினீர், நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறபடியால் நீர் எப்பொழுதுமே ஒரு வழியை உண்டுபண்ணுகிறீர். ஒரு ஊழியக்காரன் இந்த கிரேக்கரை உம்முடைய சமூகத்திற்குள் கொண்டு வந்தான், அவர்கள் உம்மைக் காண வேண்டும். பிதாவே, இன்றிரவு எங்களுக்கும் அதே சிலாக்கியத்தை அருளும். ஊழியக்காரர்களாகிய, நாங்கள் இந்தக் கூட்டத்தாரை உம்முடைய பிரசன்னத்திற்குள் கொண்டு வருவோமாக. நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற, இயேசுவை இன்றிரவு நாங்கள் காண்போமாக. கர்த்தாவே, அதை அருளும். 106. கர்த்தாவே, இழக்கப்பட்டவர்களை இரட்சியும், ஒரு புருஷனோ, ஸ்திரீயோ, பையனோ அல்லது பெண்ணோ இருந்தால். எங்களுடைய தேசம் கொலைகாரர்களாலும், தொண்டையை துண்டிப்பவர்களாலும் மிகவும் மாசுபட்டிருப்பதை நாங்கள் காணும்போது, தாறுமாறாக்குகிறவர்களையும், இன்றைக்கு தேசத்தில் உள்ள சீர்கேட்டையும் காண்கிறோமே! சபைகளில் உள்ள சீர்கேட்டைக் கண்டு, அவர்கள் அங்கே சபை முறையிலான படுகொலைக்கு வழி நடத்திச் செல்வதைக் காண்கிறோம், ஏனென்றால் அவர்கள் தேவனால் அருளப்பட்ட வழியில் சென்று கொண்டிருக்கவில்லையே! அவர்கள் வார்த்தையின் மூலம் வருவதற்கு பதிலாக ஏதோ ஒரு கோட்பாட்டின் வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். 107. தேவனே, உண்மையாக, அசலாக, பிறந்த கிறிஸ்தவர்கள், நான் அதை விளக்கிக் காண்பித்தது போல, உண்மையான வாத்துகளாயிருப்பதன் மூலம், அவர்கள்..."என் ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கின்றன, அவைகள் ஒரு அந்நியனைப் பின்பற்றாது." கர்த்தாவே, உம்முடைய சத்தம் வார்த்தையாயுள்ளது. அதுவே எப்பொழுதும் சபைக்காகவும், ஜனங்களுக்காகவும் நீர் அருளியிருக்கிற வழியாய் இருந்து வருகிறது, அதுவே உம்முடைய வார்த்தையாயுள்ளது. "உம்முடைய வார்த்தையே சத்தியம்." நீரே வார்த்தையாயிருக்கிறீர். வேதம் நமக்கு, "தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயிருக்கிறது. இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயிருக்கிறது" என்று எங்களுக்கு சொல்கிறது. 108. இஸ்ரவேலர் தங்களுடைய மேசியாவை ஏன் காண முடியவில்லை, அவர் அந்த வார்த்தையாயிருந்தார் என்பதை அவர்கள் கண்டபோது, அவர்களுடைய இருதயங்களிலுள்ள நினைவுகளை அவர் எப்பொழுது நிதானிக்க முடிந்தது? அவர்கள் ஏன் அவ்வாறு செய்யவில்லை? தீர்க்கதரிசிகள் மூலம் அதை அவர்கள் புரிந்து கொண்டனர், தீர்க்கதரிசிகளால் முடியும்; ஆனால் தேவனுடைய பரிபூரணம் அவருடைய குமாரனுக்குள்ளாக உண்டாக்கப்பட்டு, அவர் நமக்கு மத்தியில் ஜீவித்தபோது, அவர்கள் குருடாக்கப்பட்டிருந்த காரணத்தால் அவர்கள் அதைக் காணத் தவறினர். 109. கர்த்தாவே, தங்களுடைய கண்களைத் திறந்திருக்கிறவர்கள், இன்றிரவு, நாங்கள் இயேசுவை எங்கள் மத்தியில் காண்போமாக. சுகவீனமான ஒவ்வொரு நபரும் சுகமடைவார்களாக. கர்த்தாவே, இதுவே இதற்கு தீர்வாகுவதாக, அவர்கள், இனி ஒருபோதும், இந்த மணி நேரம் முதற்கொண்டே...ஆனால் நீர் மேசியா என்று விசுவாசிப்பார்கள். அவர்கள் தேவனுடைய வழியில் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அநேகர் இன்றிரவு, இங்கே மரித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றிரவு, அநேகர் இங்கே இருக்கிறார்கள், உம்முடைய, உம்முடைய உதவி வரவில்லையென்றால், அநேகமாக இன்றிலிருந்து ஒரு வாரம் இங்கு இருக்க முடியாது. 110. இப்பொழுது, பிதாவே, நீர் வாக்குத்தத்தம் செய்ததற்கு மாத்திரமே நீர் பொறுப்புள்ளவராயிருக்கிறீர். ஆனால் நாங்கள் உம்மைக் காண்போம் என்று நீர் வாக்குப்பண்ணினீர். நீர் செய்ததையே நாங்களும் செய்வோம் என்று நீர் வாக்குப் பண்ணினீர். இதுவே அந்த வேளையாயுள்ளது. நான் அதை அறிக்கை செய்திருக்கிறேன்; நான் அதை விசுவாசிக்கிறேன். நீர் அவ்வண்ணமாய்க் கூறக் கேட்டேன்; உம்முடைய வார்த்தை அவ்வண்ணமாய்க் கூறுகிறது. நீர் அதை உறுதிப்படுத்துகிறீர். அது உண்மை என்பதை நான் அறிவேன். இப்பொழுது கர்த்தாவே, இது தெரியப்படுத்தப்படட்டும். அது தேவனுடைய இராஜ்ஜியத்தின் நிமித்தமாக, இப்பொழுது செய்யப்படக்கடவது என்று, எழுதப் பட்டிருக்கிறது. ஆமென். 111. நாம் ஒரு ஜெப வரிசையை அழைக்கப் போகிறோம் என்று நான் நம்பவில்லை. நான் அதற்கு இங்கிருந்தே ஜெபிப்பேன் என்று நான் நம்புகிறேன். 112. உங்களில் எத்தனை பேர் சுகவீனமாயிருக்கிறீர்கள்? இப்பொழுது நீங்கள்... நீங்கள் உங்களுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு, நீங்கள் சுகவீனமாயிருக்கிறீர்கள் என்று சாட்சி கொடுக்கிறீர்கள். 113. உங்களில் எத்தனை பேர், "சகோதரன் பிரான்ஹாம், நான் உண்மையாகவே இரட்சிக்கப்படவில்லை" என்று அதே காரியத்தை அறிக்கை செய்வீர்கள்? "எனக்காக ஜெபியுங்கள்" என்று நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லதுதான். அது...தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. "நான் இரட்சிக்கப் படவில்லை." 114. இப்பொழுது, உங்களுடைய கரங்களை உயர்த்தின நீங்கள், மற்றும் உயர்த்தாத நீங்களும், "ஆனால், சகோதரன் பிரான்ஹாம், உண்மையாகவே நான் இரட்சிக்கப்பட விரும்புகிறேன். அது என்னுடைய இருதயத்தில் உள்ளது. உலகத்தில் எவருக்கும் ஒன்றும் விடப்பட்டிருக்கவில்லை என்றே நான் விசுவாசிக்கிறேன்." உங்களுடைய இரட்சிப்பைக் காட்டிலும் மகத்தானதாய், நீங்கள் எதை அடைய முடியும்? "எனக்காக ஜெபியுங்கள். நான் இரட்சிக்கப்பட வேண்டும்." கட்டிடம் முழுவதும், எங்கிருந்தாலும் நீங்கள், "எனக்கு வேண்டும்..." என்று உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? 115. உங்களில் எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமல், "நான் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் அறிவேன்" என்று, கூறுகிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். "நான் பெற்றிருக்கவில்லை; எனக்கு வேண்டும்." சரி, அவ்வாறு பெறாமலிருக்கிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். 116. இப்பொழுது, கிறிஸ்து தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார், நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை அவருக்குக் காத்துக்கொள்ள வேண்டும். அவர் வார்த்தையாயிருக்கிறார். இப்பொழுது, எபிரெயர் 4-ம் அதிகாரம், "தேவனுடைய வார்த்தை" என்று கூறியுள்ளது, அது கிறிஸ்து. கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். உங்கள் எல்லோருக்கும் அது தெரியுமா? 'ஆமென்" என்று கூறுங்கள். [சபையோர், 'ஆமென்" என்கின்றனர்.-ஆசி.) அவர் வார்த்தை, "நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்." அவர் மோசேக்கு என்னவாயிருந்தாரோ, அவ்வாறே அவர் எலியாவிலும் இருந்தார்; அவர் எலியாவுக்குள்ளாக என்னவாயிருந்தாரோ, அவர் யோவானிலும் இருந்தார்; அவர் யோவானில் என்னவாயிருந்தாரோ, அவர் தம்மை இயேசுவுக்குள்ளாக நிறைவு செய்தார். அவர் அன்று இருந்த விதமாகவே இன்றைக்கும் இருக்கிறார், அது இன்னமும் இந்நாளுக்காக தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. அது அவரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை ரூபகாரப்படுத்துகிற ஒளியாக ஆக்குகிறது. 117. நண்பர்களே, நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். இயேசு பிரசன்னமாயிருக்கிறார். நீங்கள் அதைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். 118. நீங்கள் உங்களுடைய ஜீவியத்தில், ஒருபோதும் காணாதிருந்தால், நீங்கள் பார்வையின் புலனை ஒருபோதும் பெற்றிருக்கவில்லையென்றால், எந்த மானிடனும் பெற்றிருக் கவில்லை, ஆனால் எப்பொழுதாவது ஒரு முறை நீங்கள் ஒரு உண்மையான அனலான உணர்வை உணருகிறீர்களா? நான் ஒரு காட்சியைக் கண்டேன், என்னால் காண முடிந்தது, அது சூரியன் என்று நான் உங்களுக்கு கூறுவேன். நீங்களோ, "அது எப்படி சம்பவிக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனக்கு உஷ்ணம் போன்ற, ஒரு உணர்வு உண்டாகிறது, உங்களால் உணரமுடியும்" என்று கூறலாம். நான், "அது சூரியன்" என்கிறேன். 'சூரியன் என்றால் என்ன?" "அது ஒரு வெளிச்சம்." ஒரு வெளிச்சம் என்றால் என்ன?" அது உங்களுக்கு ஒரு புதிய உலகமாக இருக்கும். 119. ஆனால் இப்பொழுது இயேசு கிறிஸ்து இங்கே நின்று கொண்டிருக்கிறார் என்று நான் உங்களிடம் கூறினால் என்னவாகும்? அவர் நம் மத்தியில் இருக்கிறார் என்று நான் உங்களிடம் கூறினால் என்னவாகும்? அவர் அதை வாக்குப்பண்ணினார். "இரண்டுபேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன். அங்குதான் நான் இருக்கிறேன்!" இப்பொழுது அது சத்தியமாயிருக்கலாம், என்னைப் பொருத்தவரையில், இது முழுவதும் சத்தியமாயிருக்க வேண்டும், அல்லது இது சத்தியமேயல்ல. இது ஒன்று சரியாயிருக்க வேண்டும் அல்லது இது சரியல்ல. 120. இப்பொழுது, உங்களுடைய இரட்சிப்பைப் பொறுத்த மட்டில், அவர் கல்வாரியில் மரித்தபோது, அவர் அதைச் செய்தார். உங்களை சுகப்படுத்தினார், அவர் கல்வாரியில் மரித்தபோது அதைச் செய்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். அவர் செய்தார் என்று வார்த்தை கூறியுள்ளது. 121. இப்பொழுது அவரால் செய்ய முடிந்த ஒரே காரியம், அவர் எனக்குக் கொடுத்த, இந்த சூட் துணியுடன் அவர் இங்கே நின்று கொண்டிருந்தால், அவர் மேசியாவாயிருந்தார் என்பது மாத்திரமே உங்களுக்கு நிரூபிக்கப்படும். 122. அவருடைய கரத்தில் உள்ள ஆணி வடுக்களால் அல்ல. எந்த மாய்மாலக்காரனும் அதைச் செய்ய முடியும், அவனுடைய முகத்தின் மேல் ஆணி வடுக்கள், இரத்தம் மற்றும் அடையாளங்கள் மற்றும் மற்ற காரியங்களை வைக்க முடியும். அது செய்யப்பட முடியும். அப்படித்தான் இருந்து வருகிறது. அவரைப் போன்று அநேகர் சிலுவையில் அறையப்பட்டுள்ளனர். அதுவல்ல அது. 123. ஆனால் அவருக்குள் என்ன இருந்தது, அவருடைய ஜீவனே! "பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்." அது அவருக்குள், நிரூபித்த, ஜீவனாயுள்ளது. கிணற்றண்டையிலிருந்த அந்த எளிய ஸ்திரீ அவர் ஒரு யூதனாயிருந்த காரணத்தினால் அவரை மேசியா என்று விசுவாசிக்கவில்லை; ஏனென்றால் அவளுடைய இருதயத்திலுள்ள சிந்தனைகளை அவரால் பகுத்தறிய முடிந்தது, அதுவே அவரை மேசியாவாக ஆக்கியது. அந்தவிதமாகவே மேசியா தம்மை கடந்த நாட்களில் அறிமுகப்படுத்தியிருந்தால், அதுவே தம்மைத் தெரியப்படுத்த அவர் அருளியிருந்த வழியாய் இருந்தது. அதுவே இக்காலத்திற்கான, அவருடைய அருளப்பட்ட வழியாய், வேதவாக்கியத்தின்படி உள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 124. இப்பொழுது, இங்குள்ள நீங்கள் ஒவ்வொருவரும், நான் ஒரு அந்நியன். நான் சுற்றும் முற்றும் பார்த்திருக்கிறேன், எனக்குத் தெரிந்த ஒரு நபரையும் நான் காணவில்லை. இங்குள்ள ஒவ்வொருவரும், என்னை அறியாதவர்களும், உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதையும் அறிந்து, உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். திடமாக, எங்கும். இந்த நபர் இங்கே இந்த கட்டிலின் மேல் படுத்து தன்னுடைய கரத்தை உயர்த்தினார். அவருக்கு என்னைத் தெரியாது. யாருக்குமே என்னைத் தெரியாது. 125. ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். தேவன் உங்களை அறிந்திருக்கிறார். இப்பொழுது, அவர் இங்கே இருக்கிறார் என்பதை அவர் நிரூபிப்பாரானால் நலமாயிருக்கும். 'சகோதரன் பிரான்ஹாம், அது என்ன?" அது ஒரு வரம். 126. ஒரு வரம் என்றால் என்ன? எப்படியாயினும், ஒரு வரம் என்றால் என்ன? "நான் ஒரு சுகமளிக்கும் வரத்தைப் பெற்றுள்ளேனே! நான் வெளியே சென்று இந்த ஒருவனை சுகப்படுத்துகிறேன், அந்த ஒருவனை சுகப்படுத்துகிறேன்" என்று கூறி, எதையாவது எடுத்து எதையாவது பயன்படுத்துவதல்ல. என்னால் முடிந்தால், நான் அதை நிச்சயமாகவே செய்வேன். இப்பொழுது, அது, ஆனால், ஒரு வரம், அது, அது, நீங்கள்-நீங்கள், நீங்கள் ஒரு வரத்தை தவறாக வியாக்கியானித்து, "பரிசுத்த ஆவியானவர் உங்களை உபயோகிக்க விட்டுக்கொடுத்து உங்களை வழியிலிருந்து விலக்கிக் கொள்வது" என்பதே ஒரு வரமாகும். பார்த்தீர்களா? அதுதான் வரம். 127. அப்படித்தான் ஒரு ஊழியக்காரனும் இருக்கிறான். அவர் பிரசங்கிக்க விரும்புகிறதை அவர் பிரசங்கிப்பதில்லை. அவன் தன்னை வழியிலிருந்து விலக்கிக் கொள்கிறான், அது ஒரு வரம், ஆவியின் ஏவுதல் உண்டாகி, அவன்-அவன் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் பேசுகிறான். மற்ற எந்த வரமும் அதேவிதமாகவே உள்ளது. இப்பொழுது, ஊழிய வரங்கள் போன்றவை இருந்து வந்துள்ளன. முதலாவதாக, தேவனால் அளிக்கப்பட்ட வரங்களில், "முதலில் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள், சுவிசேஷகர்கள்" என்பதாகும். அதுதான் உத்தியோகங்கள். அதுவே நம்முடைய வரங்களாயிருக்கின்றன. 128. இப்பொழுது, இயேசு கிறிஸ்து கடைசி நாட்களில் இதைச் செய்வார் என்று வாக்குப்பண்ணினார். அவர் அதைச் செய்வாரானால், அவர் அதைச் செய்வதாக வாக்குப் பண்ணியிருந்தால், இன்றிரவு, எத்தனை பேர் அவரை விசுவாசித்து ஏற்றுக் கொள்வீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்தி, "நான் அவரை ஏற்றுக் கொள்வேன்" என்று கூறுங்கள். அப்படியானால் இங்கு எத்தனைபேர்...உங்களுக்கு நன்றி. இங்குள்ள எத்தனைபேர் இதற்கு முன்பு எந்த கூட்டங்களுக்கும் வந்திராதவர்கள், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். என்னே, கிட்டத்தட்ட பாதி கூட்டம். எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள், அவர் அதைச் செய்வதற்கு முன்பே, நீங்கள் எப்படியும் விசுவாசிப்பீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 129. இப்பொழுது பாருங்கள். நான் உங்களிடம் சத்தியத்தை கூறியிருந்தால், தேவன் எனக்கு பதிலளிக்க கடமைப் பட்டவராயிருக்கிறார். அவர் செய்வார். அவர் தம்முடைய வார்த்தைகளை உங்களுடைய வாயில் போடுகிறார். அது உண்மை, அது அவருடைய வார்த்தைகள், அது அதைச் செய்ய வேண்டும். "என் வார்த்தையை நான் அனுப்பினேன், அது வெறுமையாய் திரும்பாது." 130. இப்பொழுது, என்னால் சுகப்படுத்த முடிந்தால், நான் அதை செய்வேன். நாம் பேசிக்கொண்டிருந்த அந்த கௌரவமான, மரித்துவிட்ட, சகோதரன் உப்ஷாவைப் போலவே. அந்த சக்கர நாற்காலியில் பின்னால் அமர்ந்திருந்த அந்த வயோதிக மனிதன், ஒரு தீரமான வயோதிக மனிதன், என்னால் கூடுமானால் நான் அவரை சுகப்படுத்தியிருப்பேன். நான் மேடையை விட்டுச் செல்லத் துவங்கினேன், நான் திரும்பிப் பார்த்தபோது, அவர் நடந்து சென்றுகொண்டிருந்ததை ஒரு தரிசனத்தில் கண்டேன். அவரை அழைத்து, அது என்னவென்பதை அவரிடத்தில் கூறினேன், அவ்வளவுதான். அவர் எழுந்து நடந்து, மேடைக்கு வந்து, அறுபத்தாறு ஆண்டுகளாக முடமாயிருந்த பிறகு, அவருடைய கால்விரல்களைத் தொட்டார். பார்த்தீர்களா? 131. அதே இரவில், ஒரு கறுப்பு நிற பெண்மணி, தன்னுடைய குழந்தையுடன், அங்கே பக்கத்தில் இருந்தாள். நான், "நான் கண்ணாடி அணிந்த ஒரு-ஒரு மருத்துவரை காண்கிறேன், மேலும்-மேலும் அவர் ஒரு சிறிய, கருப்பு நிறமுள்ள பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை செய்துள்ளார், அது அவளுடைய தொண்டையை செயலிழக்கச் செய்துள்ளது" என்று கூறினேன். 132. ஒரு வயோதிக கறுப்பு நிற பெண்மணி, உங்களால் அவளை மேடைக்கு வருவதை தடுக்க முடியாது. அவள், "கர்த்தாவே, இரக்கமாயிரும், அது என்னுடைய குழந்தையாயிற்றே!" என்றாள். இதோ அவள் வந்தாள், ஒரு கூட்ட வாயிற்காப்போர் அவளை தடுத்து நிறுத்தக்கூட முடியவில்லை. 133. நான், "அம்மா, இங்கு வருவதனால் எந்த நன்மையும் ஏற்படாது. அது அல்ல...அது தேவன்" என்றேன். நான், "இங்கே வருவதால் அது எந்த நன்மையும் செய்யாது. அப்படியே விசுவாசியுங்கள்" என்றேன். அவள் முழங்காற்படியிட்டு ஜெபிக்கத் துவங்கினாள். நான் கூட்டத்தினூடாக நோக்கிப் பார்த்தேன், நான் ஒரு சந்து போன்று, செல்வதைக் கண்டேன். நான் ஒரு சிறு கறுப்பு நிற பெண் தன்னுடைய கரங்களில் ஒரு பொம்மையோடு, அந்த சந்தினூடாக சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். நான் அந்த சிறிய, கறுப்புநிறமுள்ள பெண்ணைப் பார்த்தேன், திரும்பிப் பார்த்தேன், அது அதே ஒருவளாய் இருந்தது. அதற்கு நான், 'அதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது" என்றேன். அவள் கட்டிலை விட்டு, எழுந்தாள். பார்த்தீர்களா? 134. அது தேவன். பார்த்தீர்களா? அது தேவன். பார்த்தீர்களா? அவரால்...யாரும் சுகப்படுத்த முடியாது. அது தேவனில் உள்ள உங்களுடைய விசுவாசமாயுள்ளது. 135. இப்பொழுது, அவர் ஒரு பிரதான ஆசாரியர் என்று வேதம் கூறியுள்ளது, இப்பொழுதே, நம்முடைய பெலவீனங்களின் உணர்வினால் தொடப்பட முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒரு பிரதான ஆசாரியன்! இப்பொழுது, அவர் ஒரு பிரதான ஆசாரியராயிருந்தால், அவர் எப்படி செயல்படுவார்? அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருப்பாரானால், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக செயல்படுவார். 136. இப்பொழுது நீங்கள் ஜெபியுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர்...நீங்கள் தேவனிடம், "தேவனே, அங்கு நின்று கொண்டிருக்கிற இந்த மனிதன் என்னை அறியான், ஆனால் அவர் கூறுவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நீர் அவ்வாறே இருக்கிறீர். நீரே கிறிஸ்துவாயிருக்கிறீர். நான் சுகவீனமாயிருக்கிறேன். எனக்குத் தேவை. நீர் என்னை அனுமதிப்பீரேயானால்...அதைச் செய்ய எனக்கு விசுவாசம் இல்லையென்றால், எனக்குத் தெரிந்த யாராவது விசுவாசமுள்ளவர்களாயிருக்கட்டும், மற்றும் அதை விடுங்கள்...நீ கூப்பிட்டு விட்டு-விட்டு-நான் அல்லது அந்த நபர் மகிமையில் உள்ள உம்முடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொடட்டும். அந்த மனிதன் வழியில் இருந்து விலக்கிக் கொண்டால், அப்பொழுது நீர் அவருடைய வாயை திருப்பிப் பேச உபயோகித்து, நீர் பூமியின் மேலிருந்தபோது செய்தவிதமாகவே அதைச் செய்யும். நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்பதை நான் அறிந்து கொள்வேன்" என்று கூறுங்கள். நாம் இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 137. கர்த்தராகிய இயேசுவே, சுவிசேஷப் பிரசங்கத்திலிருந்து தீர்க்கதரிசன கிரியைக்கு திரும்புகிற, அதே சமயத்தில் நான் உம்மை விசுவாசிக்கிறேன், கர்த்தாவே, நீர் அதை வாக்குத்தத்தம் செய்தீர். இன்றிரவு, நீர் அதை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அதை அருளும். எனக்குச் செவிகொடுங்கள். இன்றிரவு, இந்தக் கூட்டத்தார் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்போது, நாங்கள் வீட்டிற்குச் செல்லும்போது, எம்மாவூரிலிருந்து வந்தவர்கள், "வழியிலே அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?" என்று கூறியது போல நாங்கள் கூறுவோமாக. இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார்; அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை. அவர்கள் அவரிடத்தில் பேசிக் கொண்டிருந்தனர்; அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர் அவர்களை வீட்டிற்குள் கொண்டு வந்து, கதவை மூடினபோது, அப்பொழுது அவர் தம்முடைய சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அதைச் செய்தவிதமாகவே ஒரு காரியத்தைச் செய்தார். அது அவர்களுடைய கண்களைத் திறந்தது. அது அவரே என்பதை அவர்கள் கண்டனர். மீண்டும், கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் வீட்டிற்குச் செல்லும்போது, அவர்களுடைய இருதயங்கள் செய்ததுபோல, எங்களுடைய இருதயங்களும் கொழுந்துவிட்டு எரிவதாக. வழி நெடுக நீர் எங்களிடத்தில் பேசியிருக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் பூமியின் மேலிருந்தபோது செய்த காரியங்களையே, இன்றிரவும் செய்யும், ஏனென்றால் நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறீர். நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 138. இப்பொழுது ஜெபத்தில் இருந்து கொண்டு அப்படியே விசுவாசியுங்கள். நாம் முதலில் இந்தப் பக்கத்தைப் பிரதிஷ்டை செய்வோம். நீங்கள் கட்டிடத்தில், எங்கிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, தேவனை விசுவாசியுங்கள். ஒவ்வொருவரும் உண்மையான பயபக்தியோடு, அமைதியாக அமர்ந்து, ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 139. இது முற்றிலும் சாத்தியமற்றது. நான் இந்தக் காலையில் ஊழியக்காரர்களின் காலை சிற்றுண்டி வேளையில், "ஒரு நம்ப முடியாத உண்மை" என்று பேசிக்கொண்டிருந்தேன். ஒரு நம்ப முடியாத உண்மை என்பது நம்பத்தகாதது, "நம்பமுடியாத ஒன்று, ஆனால் அதே சமயத்தில் உண்மை." பரிசுத்த ஆவியானவர் இங்கே நின்று, அந்தக் கூட்டத்தில் ஏதோ ஒரு காரியத்தை, எனக்குத் தெரியாத ஜனங்களிடத்தில் பேசுவார் என்பதை நீங்கள் அறிவீர்கள், அது ஒரு நம்ப முடியாத உண்மையாய் இருக்க வேண்டும். அது விளக்கப்பட முடியாத ஒரு காரியமாயுள்ளது. அவர் அதைச் செய்வார் என்று எனக்குத் தெரியாது. அவர் செய்வார் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேன், அவர் செய்வார் என்று நம்புகிறேன். 140. இப்பொழுது அப்படியே ஜெபித்து, "கர்த்தராகிய இயேசுவே, நான் உம்முடைய வஸ்திரத்தைத் தொட விரும்புகிறேன், எனக்கு- எனக்கு ஒரு தேவை உண்டு. கர்த்தாவே, என் வாழ்நாள் முழுவதும் நான்-நான் உமக்கு சேவை செய்வேன் என்று நான் உமக்கு வாக்களிக்கிறேன்" என்று கூறுங்கள். நீங்கள் மனந்திரும்ப வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நீங்கள் மனந்திரும்ப வில்லையென்றால்; மனந்திரும்பி, "கர்த்தாவே, நான் மனந்திரும்ப விரும்புகிறேன். நீர் என்னை சுகப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீர் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கர்த்தாவே இப்பொழுது என்னை சுகப்படுத்தும். நான் உம்முடைய ஊழியக்காரன்" என்று கூறுங்கள். 141. நான் போய்க்கொண்டிருந்தேன்...நீங்கள் இன்றைக்கு ஜெப அட்டைகளை அளித்தீர்களா? நான் பில்லியிடம் கேட்கப் போவதாயிருந்தேன்...அவன் அதைச் செய்யவில்லையென்றால், நான் ஒரு ஜெப வரிசையை அழைப்பேன். ஆனால் இன்றைக்கு அவர்கள் ஒருபோதும் ஜெப அட்டைகளை கொடுப்பதில்லை. பயபக்தியோடு உட்கார்ந்து விசுவாசியுங்கள். 142. இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இங்குள்ள ஒவ்வொரு ஆவியையும், அவருடைய வார்த்தை தெரியப்படுத்தவும், நியாயத்தீர்ப்பின் நாளிலே நாம் சாக்குபோக்கு சொல்ல முடியாதபடிக்கு, தேவனுடைய மகிமைக்காக, என் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கிறேன். 143. இப்பொழுது இந்த விதமாக நோக்கிப் பார்த்து, இப்பொழுது விசுவாசியுங்கள். உங்களுடைய முழு இருதயத்தோடு ஜெபியுங்கள், அப்படியே தாழ்மையாய், ஜெபியுங்கள், அதற்காக சண்டையிடாதீர்கள், உங்களை இறுக்கத்தினின்று விடுவித்துக் கொண்டு, "கர்த்தாவே, நீர் வாக்குத்தத்தம் செய்தீர். நான் உம்மை விசுவாசிக்கிறேன்" என்று கூறுங்கள். அதைத்தான் நான் செய்ய வேண்டும். 144. நான் உங்களைக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதை நான் அறிவேன். எத்தனை பேர் அந்த ஒளியைக் கண்டிருக்கிறீர்கள்? நாம் பார்ப்போம். நீங்கள் அதைக் குறித்த படத்தைப் பார்த்திருக்கிறீர்கள். அதனுடைய புகைப்படத்தை எப்போதாவது பார்த்திருக்கிற உங்கள் கரங்களை நாங்கள் காணட்டும். நீங்கள் அதை அங்கே காணவில்லையா? பாருங்கள், அது மற்றொரு பரிமாணம். அது அந்தப் பெண்மணியின் மேல் உள்ளது. 145. அவள் தன்னுடைய கால்களிலும் முதுகிலும் உள்ள கோளாறினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள். அவள்... சகோதரியே, தேவனால் உங்களை சுகப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் எதைத் தொட்டீர்கள்? உங்களுக்கு என்னைத் தெரியாது, ஆனால் நீங்கள் ஏதோ ஒன்றைத் தொட்டீர்கள். நீங்கள் யாரென்று கர்த்தராகிய இயேசு என்னிடம் கூறுவாரேயானால், அது உங்களை மேலாக விசுவாசிக்கச் செய்யுமா? நீங்கள் திருமதி. பிலிப்ஸ். அது உண்மையென்றால், எழுந்து நில்லுங்கள். சரி. நான் உங்களுக்கு முற்றிலும் அந்நியனாயிருக்கிறேனா? அது உண்மையானால் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நான் அவளை என் வாழ்க்கையில் ஒருபோதும் கண்டதேயில்லை. அவள் எதைத் தொட்டாள்? அதன்பின்னர், அந்த பெண்ணிடம் போய் பேசுங்கள். இப்பொழுது வலிகள் யாவும் போய்விட்டன. நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். நீங்கள் வீட்டிற்கு சென்று நலமாக இருக்கலாம். 146. இதோ ஒரு பெண்மணி, அங்கே அவளுக்குப் பின்னால் இருக்கிறாள். அவள் ஒரு நரம்பு தளர்ச்சியினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள். ஓ, தேவனே, அவள் இல்லையென்றால்... அவளுடைய பெயர் திருமதி. ஸ்டார். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசியுங்கள். உங்களுடைய காலூன்றி எழும்பி நின்று, உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஒரு அந்நியனாயிருந்தால், உங்களுடைய கரங்களை அசைத்துக் காட்டுங்கள். உங்களுடைய முறிவு முடிவுற்றுவிட்டது. இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்துகிறார். 147. அவர் என்ன வாக்குத்தத்தம் செய்தார்? அவர் அதை வாக்குப்பண்ணினார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 148. அங்கே அவளுக்குப் பின்னால், ஒரு பெண்மணி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் நரம்புத் தளர்ச்சியடைந்து, சிக்கல்களைக் கொண்டிருக்கிறாள். அவள் புகைப்பிடிப்பதை விட்டுவிட விரும்புகிறாள். அவளுடைய பெயர் திருமதி. பார்டன் என்பதாகும். திருமதி. பார்டன், எழுந்திரு. உங்களுடைய சிகரெட்டுகள் முடிந்துவிட்டன. இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்துகிறார். என் ஜீவியத்தில் நான் அந்த பெண்ணைக் கண்டதேயில்லை. 149. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது என்னால் அதைச் செய்ய முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுதான் இயேசு கிறிஸ்து. அது என்ன? "இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." அது வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். உங்களால் அதை விசுவாசிக்க முடியவில்லையா? 150. இங்கே, இங்கே ஒரு மனிதன் குடலிறக்கத்தோடும், இருதயக் கோளாறோடும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அது உண்மை. எனக்கு அந்த மனிதனைத் தெரியாது. நான் அவரை ஒருபோதும் கண்டதேயில்லை. ஆனால் அவர் ஒரு ஊழியக்காரர். சங்கை, திரு. கின்ஸி. அது உண்மை. ஐயா, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய காலூன்றி எழும்பி நின்று, உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்துகிறார். 151. சொல்லப்போனால், ஒரு ஊழியக்காரனாயிருக்கிறபடியால், நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? உங்களுடைய கரங்களை உங்களுடைய மனைவி மீது வையுங்கள், அவள் ஒரு சிறுநீரக கோளாறினால், கல்லீரல் கோளாறோடும், அதிக எடையோடும், சிக்கல்களோடும் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள். அவள் மீது உங்களுடைய கரங்களை வையுங்கள். நீங்கள் விசுவாசித்தால், அது அவளை விட்டுப் போய்விடும். 152. கூறப்போனால், உங்களுக்குப் பின்னால் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவர் மரணத்திற்கேதுவாக நிழலிடப் பட்டிருக்கிறார். அவருக்கு புற்றுநோய் உள்ளது. அந்த மனிதன் கட்டி, புற்று நோய், நரம்புத் தளர்ச்சியினால் அவதியுறுகிறார். அவருடைய பெயர் திரு. யங். இப்பொழுது விசுவாசியுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்துகிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? சரி, ஐயா. 153. இங்கே ஒரு மனிதன் படுத்திருக்கிறார், இங்கே இந்த கட்டிலின் மேல் படுத்துக் கொண்டிருக்கிறார். ஐயா, எனக்கு உங்களைத் தெரியாது. என்னால் உங்களை சுகப்படுத்த முடிந்தால், நான் அதை செய்வேன். நான் உங்களுக்கு ஒரு அந்நியன். நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். நீங்கள் இங்கு வருவதற்கு முயற்சி செய்துள்ளீர்கள். உங்களிடமிருந்து தவறை உங்களால் மறைக்க முடியாது; ஆனால் என்னால் உங்களை சுகப்படுத்த முடியாது. நீங்கள் உங்களுடைய மனைவியோடு இங்கு வந்திருக்கிறீர்கள். அந்த மஞ்சள் நிறப் பழுப்பு அங்கியுடன் அவள் அங்கே அமர்ந்து கொண்டிருக்கிறாள். அது உண்மை. சரி. அந்த மனிதன் மரணத்திற்கு நிழலிடப்பட்டிருக்கிறான்; அவரால் இப்பொழுது கொஞ்ச காலம் மாத்திரமே ஜீவிக்க முடியும். அவருக்கு புற்றுநோய் உள்ளது. 154. சகோதரியே, நீங்களும் கூட, அவதியுற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதனால் அவதியுறுகிறீர்கள் என்பதை தேவனால் என்னிடம் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உங்களுடைய முதுகுத் தொல்லை. அது உண்மை. அது உண்மையானால், எழும்பி நில்லுங்கள். சரி, நீங்கள் உங்களுடைய சுகமளித்தலைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதை விசுவாசியுங்கள். உங்களுடைய கரத்தை உங்களுடைய கணவர் மீது வையுங்கள். 155. ஐயா, நீங்கள் என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அங்கே கிடந்தால், நீங்கள் நிச்சயமாக மரிப்பீர்கள். உங்களால் ஜீவிக்க முடியாது. அவ்வளவுதான். வைத்தியர்கள் உங்களை கைவிட்டுள்ளனர். புற்றுநோய் உங்களைத் தின்றுபோட்டிருக்கிறது. நீங்கள் சுகமடைந்ததைக் காட்டிலும் பெரிய காரியங்களை நான் கண்டிருக்கிறேன். என்னால் உங்களை சுகப்படுத்த முடியாது. ஆனால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசித்தால் நலமாயிருக்குமே! நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இது உங்களுடைய ஒரே வாய்ப்பு. உங்களுடைய கடைசி மணி நேரங்கள் கடந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அப்படி செய்தால், அந்த கட்டிலை விட்டு எழும்பி நில்லுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அங்கிருந்து எழும்புவீராக! உங்களுடைய காலூன்றி எழும்பி நின்று, சுகமடைந்து, இங்கிருந்து நடந்து சென்று, தேவனை மகிமைப்படுத்துங்கள். யாராகிலும் அங்கே அவருக்கு கரம் கொடுத்து உதவி செய்யுங்கள். இதோ அவர் தன்னுடைய காலூன்றி நிற்கிறார். 156. இங்குள்ள எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். எழுந்து நில்லுங்கள். சுகமடைய விரும்புகிற மற்றவர்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எழும்பி நில்லுங்கள். உங்களுடைய கரங்களை உயர்த்தி, தேவனைத் துதியுங்கள். அவருக்குத் துதியையும், மகிமையையும் செலுத்துங்கள். இப்பொழுது உங்களுடைய சுகமளித்தலுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்! 157. சகோதரனே, மருத்துவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இது தேவனால் அருளப்பட்ட வழியாய் உள்ளது. அதை விசுவாசியுங்கள்! 158. எத்தனைபேர் தேவனால் அருளப்பட்ட வழியை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்தி, நீங்கள் ஒவ்வொருவரும் தேவனுக்கு துதி செலுத்துங்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள் என்று விசுவாசியுங்கள். ஆமென்.